போகர் சப்தகாண்டம் 4066 - 4070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4066. தாமான யின்னமொரு மார்க்கங்கேளு தாக்கான தனக்கோட்டி யிடபாகத்தில்
வேமான மென்றதொரு வாசீர்மந்தான் மிக்கான காடுள்ளே குகைதானுண்டு
கோமானுக் கொப்பான ரிஷியார்தாமும் குருவான சாமியென்ற சித்துவுண்டு
நாமான மாகவல்லோ குளிகைபூண்டு நன்மையுடன் சென்றேனே வனந்தானுள்ளே

விளக்கவுரை :


4067. உள்ளான வாசீர்மந் தன்னிற்சென்றேன் ஓகோகோ நாதாக்கள் சித்தருண்டு
கள்ளரென்ற சித்தரப்பா கணக்கோயில்லை காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு
தெள்ளமுர்தமானதொரு சித்துமுன்னே சிறப்புடனே குளிகைகொண்டு யானும்சென்றேன்
மெள்ளவே சித்தர்முனி கண்டபோது மேதினியில் யாரென்று எனைக்கேட்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4068. கேட்டவுடன் சித்தர்கட்கு விடையுஞ்சொன்னேன் கெடியான காலாங்கி சீஷனென்றேன்
நீட்டமுடன் தனக்கோட்டி காணவந்தேன் நீதியுடன் சீதையென்னும் தேவிகண்டேன்
வாட்டமுடன் இடப்பாகங் குளிகைகொண்டேன் வாகான வாசீர்மமிங்கேகண்டேன்
நாட்டமுடன் குளிகைகொண்டு இறங்கியல்லோ நாதாந்த சித்தொளிவைக் கண்டேனே

விளக்கவுரை :


4069. கண்டவுடன் ரிஷிக்கூட்டம் முனிவர்தாமும் கருத்துடனே எந்தனுக்கு உறுதிசொல்லி
அண்டமுடன் ஆகாயரிஷிகள் தேவர்அப்பனே அதிசயங்கள் தாமுரைத்து 
மண்டலங்கள் தான்புகழும் ரிஷியார்தம்மை வாட்டமுடன் யான்கண்டேன்போகர்தாமும்
தண்டமிழ்சூழ் சித்தர்முனிரிஷிகள் கூட்டம் தன்மையுடன் எந்தனுக்கு விதிசொன்னாரே

விளக்கவுரை :


4070. வதியான வாசகத்தை யானுங்கேட்டு விருப்பமுடன் குளிகைகொண்டு வாசீர்மத்தில்
பதியான குபர்னரிஷியார்தம்மை பட்சமுடன் காணுதற்கு வருகிற்சென்றேன்
ததியான ரிஷிபக்கஞ்சென்றபோது தகமையுள்ள ரிஷியாரும் என்னைப்பார்த்து
மதிபோன்ற திருமுகத்தை நோக்கியல்லோ மார்க்கமுடன் வார்த்தையது சொன்னார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4061 - 4065 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4061. பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாருலகில் வெகுகோடி சித்தருண்டு
நேரேதான் மனோன்மணியைக் கண்டதில்லை நேர்மையுடன் ஜோதியென்ற ஒளிவுகண்டார்
வீரேதான் சொரூபநிலைக்கண்டபோதே விருப்பமுடன் ஜோதிமயந்தன்னிற்தோன்றி
கூரேதான் மனோன்மணியை நினைத்தவண்ணம் கொப்பெனவே தெரிசனைப்போல் தோற்றலாச்சே

விளக்கவுரை :


4062. தோற்றமுடன் புலிப்பாணி மைந்தாகேளு தொல்லுலகை சுத்திவந்து குளிகைகொண்டேன்
காற்றில்லா ராமேஸ்வரந் தானென்னுங்கனமான தனக்கோட்டி கடலைக்கண்டேன்
மேற்றிசைக்குக் கீழ்பாகங் கடலோரந்தான் மேலான தென்பொதிகை சமீபமப்பா
நாற்றமுள்ள சங்கதுவும் பிறக்கும்ஸ்தானம் நடுக்கடலாந் திட்டொன்று கண்டேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4063. கண்டேனே நடுக்கடலாம் மத்திபத்தின் கனமான பாறையொன்று கட்டொன்றுண்டு
தண்டுளவ மாலையணி கிருஷ்ணபூபன் தகமையுள்ள மண்டபந்தா னங்கொன்றுண்டு
கொண்டல்வண்ணன் ஸ்ரீராமர் சீதாதேவி குடியிருப்பு வாசீர்மந் தன்னைக்கண்டேன்
வெண்டாமரைப் பொய்கையுண்டு ஸ்தலமுமுண்டு மேன்மையுள்ள குகையதுவும் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4064. பார்த்தேனே சீதையென்ற பெண்ணணங்கை பண்பான வச்சிரமாங் கல்லினாலே
நேர்த்தியாய் கைச்சிலையாய் அமைத்துமேதான் நேரான முகவையென்னும் சாகரத்தில்
பூர்த்தியாய் சேதுபதி ஸ்நாணம்செய்வோர் புகழான ராமருட தேவிதன்னை
தீர்த்தமுடன் சீதாவின் பிராட்டியரை தினக்கிரம வலங்காரம் செய்வார்தாமே

விளக்கவுரை :


4065. செய்வாரே ராமலிங்கம் பூசைசெய்து ஸ்ரீராமர் பிராட்டியார் ரூபங்காண  
உய்யவே வோடமது தன்னிற்சென்று வுத்தமனார் ராமர்தேவிதன்னை
துய்யமுனி சித்தனவா ரிஷிகளெல்லாம் சுத்தமுடன் வோடமதிற்சென்றுமேதான்
பையவே விக்கிரகம் பூசைசெய்ய பட்சமுடன் போவாரும் வருவார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4056 - 4060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4056. ஆமேதான் பொய்கையிடம் கிட்டிநின்றேன் வப்பனே மனோன்மணியைக் கண்டதில்லை
தாமேதான் மனோன்மணியாள் ரூபம்போல சொரூபமானதொரு ஜோதிகண்டேன்
போமேதான் பொன்னான வாசீர்மத்தைப் பொங்கமுடன் நெடுந்தூரங் கண்டேன்யானும்
தேமேதானவச் சித்திரப்பொய்கையப்பா தெளிவான மண்டபத்தைப்பார்த்தேன்பாரே

விளக்கவுரை :


4057. பார்த்தேனே நீராழிமண்டபத்தை பளிங்கான பன்னகச்சாலைகண்டேன்
தீர்த்தமுடன் பூஞ்சோலைத் தன்னைக்கண்டேன் கதிழானன்னம்பலந்தன்னைக் கண்டேன்
சேர்த்துமே ரிஷிகோடி முனிவர்தம்மை சேனைமுதல் நவகோடி சித்தர்கண்டேன்
சார்த்தகிரி யாழ்வார்கள் கணக்கேயில்லை சட்டமுடன் வடகோடி மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

4058. தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி சொல்லக்கேளும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் குவலயத்தில் வெகுகால மிருந்தாரப்பா
தேனான மனோன்மணியாள் காமரூபி தேவிதனை யொருநாளுங்கண்டதில்லை
பானான பராபரியாள் ஜோதியல்லால் பாங்கியரை ஒருநாளுங்காணேன்தானே

விளக்கவுரை :


4059. காணேணே என்றுசொல்லி காலாங்கிநாதர் கனமாக எந்தனுக்குச் சொன்னதுண்டு
வேணபடி வெகுகாலங் காத்திருந்தார் வேதாந்தத் தாயினது வருளைக்காண
மாணவே வரைகோடி காலமப்பா வையகத்தில் மனோன்மணியாள் சொரூபங்காண
நீணவே காயாதிகற்பங்கொண்டு நெடுங்காலந் தாமிருந்தார் தவசியாமே

விளக்கவுரை :


4060. தவசுடனே சின்மயத்திலிருந்துகொண்டு தாரிணியில் மதியமுர்தம் வெகுவாய்ப்பூண்டு
பவமகற்றி சமாதிதனில் கோடிகாலம் சட்டமுடன் தாமிருந்தார் நாதர்தாமும்
சிவக்கடலைக் காணுதற்கு வெகுவாய் எண்ணி தீரமுடன் சமாதிதனி லிருந்தாரப்பா
அவமுடனே சமாதிவிட்டு ஏகியுந்தான் வவனிதனில் மனோன்மணியைக் காணார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4051 - 4055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4051. கண்டேனேமனோன்மணியாள் பொய்கைதன்னை மற்றெவரால் காணப்போமோ
தொண்டனென்னும் ஆழ்வார்கள் பொய்கையன்னில் தேற்றமுடன் காவலது பூண்டுநிற்பார்
வண்டுழலாள் மனோன்மணியாள் நிர்த்தஞ்செய்வாள் வசந்தமணிமண்டபத்தின் பொய்கைதன்னில்
தெண்டமுட னடியார்கள் கூட்டமெல்லாந் தெரிசிப்பார் மனோன்மணியை தெரிசிப்பாரே

விளக்கவுரை :


4052. பாரேதான் அடியேனுங்குளிகைகொண்டு பட்சமுடன் சீஷவர்க்கந்தன்னைக்கண்டேன்
நேரேதான் ஆசீர்மந் தன்னைச்சுற்றி நேர்மையுடன் காத்திருக்கும் ரிஷியார்பக்கல்
சீரேதான் குளிகையது பூண்டுகொண்டு சிறப்புடனே பொய்கைதனில் நடுமையத்தில்
கூரேதான் நீடாழி மண்டபத்தில் கொப்பெனவே இறங்கிவிட்டேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :

[ads-post]

4053. பண்புடனே ரிஷிமுனிவர் என்னைக்கண்டு பதறியே ஓடிவந்துயாரென்றார்கள்
திண்பான காலாங்கி நாதர்தம்மை திடுக்கிட்டு மனந்தனிலே தான்நினைத்து
நண்பாக காலாங்கி சீடனென்றேன் நாதாக்கள் சித்தொளிவு நடுங்கினார்கள்
கண்பான மனோன்மணியைக் காணவென்று காசினியில் குளிகைகொண்டு வந்திட்டேனே

விளக்கவுரை :


4054. வந்திட்டேன் என்றதுமே ரிஷியார்தாமும் வணக்கமுடன் எந்தனுக்கு வாசீர்மித்து
தந்திட்டார் மனோன்மணியைக்காணவென்று தகமையுடன் இடமதுவும் காண்பித்தார்கள்
அந்தமுடன் எந்தனையும் அழைத்துக்கொண்டு வன்பான வாசீர்மம் தன்னின்முன்னே
சொந்தமுடன் என்னைநிறுஃத்தி வுளவுசொன்னார் சூட்சமுடன் தான்கண்டு திரும்பினேனே

விளக்கவுரை :


4055. திரும்பியே மனோன்மணியைக்காணவென்று சிலகாலமங்கிருந்து வுளவுகண்டேன்
அரும்பொன்மணி நவரத்தின வாசீர்மத்தில் அழகான மனோன்மணியாள் பீடம்கண்டேன்
சுரும்புடைய பூந்துடையாள் சொரூபங்கண்டேன் தோற்றமுடன் கண்ணிற்குத் தோற்றலாச்சு
கரும்பெனவும் தேன்மாரி பொழியக்கண்டேன் கைலங்கிரி போலிருக்கும் பொய்கையாமே

விளக்கவுரை :


Powered by Blogger.