போகர் சப்தகாண்டம் 4211 - 4215 of 7000 பாடல்கள்
4211. ஊதவே மலையெல்லாம் தங்கமாச்சு
வுத்தமனே வதிலிருந்த தவசிமார்கள்
மாதவங்கள் செய்கின்ற
ரிஷிகள்தாமும் மகத்தான வடவாக்கினி யனல்கொள்ளாமல்
காதவங்கள் மிகவாகி
ரிஷியார்தாமும் கைலங்கிரி மலைதானும் இடங்கொள்ளாமல்
பாதவத்தில் மிகுந்ததொரு
வகஸ்தியர்முன்னே பொங்கமுடன் முறையமது செய்திட்டாரே
விளக்கவுரை :
4212. முறையான
சித்துமுனிரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் ஓடிவந்துவகஸ்தியனார்முன்னே
சிறைமீண்ட சித்தனாம்
தேறைதானும் தேற்றமுடன் மலையடிவாரந்தன்னில்
திறையான தீமூட்டி
துருத்திகொண்டு திறமுடனே மலைதனையே தீயால்தாக்க
குறையான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே
விளக்கவுரை :
[ads-post]
4213. தாமான தேறைமுனி
சித்துதம்மால் தரணியெல்லாம் சித்துமயம் ஆகிப்போகும்
சாமான மலைகளெல்லாந்
தங்கமானால் தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ
கோமான் குருவேது சீஷரேது
குவலயத்தில் ஒருவருந்தான் இல்லைகண்டீர்
நாமான வாகவல்லோ கூறிவிட்டோம்
நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே
விளக்கவுரை :
4214. காக்கவென்று சொல்லியல்லோ
கரங்குவித்து கைலாசவகஸ்தியருக்கு யிதவுகூறி
ஆக்குவது அழிப்பதுவும்
உம்மாலாகும் வப்பனே கடாட்சமதுசெய்யவென்ன
நோக்கமது கொண்டுமல்லோ
அகஸ்தியர்தாமும் நொடிக்குள்ளே சினமதுவும் அதிகமாகி
தூக்கியே தேறைய சித்துதம்மை
துப்புரவாய் கிழித்தெறிந்து போட்டிட்டாரே
விளக்கவுரை :
4215. போட்டாரே யகஸ்தியனார்
சித்துதம்மை பொங்கமுடன் தம்பதிக்குப்போனாரப்பா
நீட்டமுடன் அகஸ்தியரும்
போனபின்பு நேரான தேறையசீஷரங்கே
கூட்டமுடன் வந்திருந்து
மூலிதன்னால் கொப்பெனவே எழுப்பிவிட்டார் சித்துதம்மை
வாட்டமுடன் மறுபடியும்
சித்துதாமும் வளமையுடன் முன்போலே யூதினாரே
விளக்கவுரை :