போகர் சப்தகாண்டம் 4196 - 4200 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4196 - 4200 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4196. கூறினேன் காலாங்கிநாதரையர் கொற்றவனார் நற்சீஷனென்றுரைத்தேன்
மாறிடவே சூரனவன் மகிழ்ந்துமல்லோ மகிமையெல்லாந் தாமுரைத்தாரெந்தனுக்கு
கோறிவந்த வினயங்கூடலாச்சே குவலயத்தில் அதிசயங்கள்தாமுரைத்தார்
வேறிடமாம் மலைகுகைகள் யாவுஞ்சொல்லி விருப்பமுடன் எந்தனுக்கு விடைதந்தாரே

விளக்கவுரை :


4197. தந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன்
அந்தமுள்ள அகஸ்தியர்க்கு வுகந்தசீஷன் அறிவுள்ள கண்மணியாம் தேரைதானும்
சொந்தமுடன் வெகுகாலம் அகஸ்தியர்தானும் தோற்றமுடன் நற்சீஷனென்றுசொல்லி
விந்தையுள்ள வதிசயங்கள் வையகத்தில் விருப்பமுடன் கண்டவரை சொன்னார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4198. பாரேதான் கண்டவரை மார்க்கமெல்லாம் பாங்குடனே தாமுரைத்தார் தேரையார்க்கு
நேரேதான் சங்கலத்தார் கூட்டமப்பா நேரான சித்தர்முனி ரிஷிவர்க்கத்தில்
சீரேதான் சமால்தனிமுனியார் சீஷன் சிறப்பான திரணாக்கியமுனிவருக்கு
நீரேதான் மூளைதனில் தலைநோக்கோடு நேர்மையுடன் வந்துமல்லோ வருத்தலாச்சே

விளக்கவுரை :


4199 வருத்தமுடன் மூளைதனில் பத்திநின்ற வாகர்ன தலைநோக்கை யென்னசொல்வோம்
பொருத்தமுடன் நோய்களிலே வருந்தியல்லோ பொலிவான துன்பமது மேலதாகி
திருத்தமுடன் நோயதனைத் தீர்ப்பதற்கு திறமான வகஸ்தியரை யழைக்கச்சொல்ல
அருத்தமது தானறிந்த கும்பயோனி அறிந்தாரே ஞானமென்ற திருஷ்டியாலே

விளக்கவுரை :


4200. ஆமேதான் வகஸ்தியரும் முன்னேசெல்ல வன்பான தேரையர் பின்னேசெல்ல
தாமேதான் அகஸ்தியனார் வத்தாரந்தான் தகமையுள்ள மருந்துவகை ஆயதங்கள்
போமேதான் தேறையர்முனிவர்தாமும் பொங்கமுடன் அடப்பமது கொண்டுயேந்தி
நாமேதான் சொன்னபடி வகஸ்தியனார்பின் வன்பாக வழிநடந்தார் தேரையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar