போகர் சப்தகாண்டம் 4326 - 4330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4326. ஆச்சப்பா அடியேனும் காட்டகத்தே வன்புடனே எந்தனையுங் கொண்டுசென்று
மாச்சலுடன் கதண்டுகளு மொன்றாய்க்கூடி மார்க்கமுடன் பவழக்கால் ஆசீர்மத்தில்
வீச்சுடனே சிம்மாதனம் ஏற்றியென்னை விருப்பமுடன் சங்கீதம்பாடலாச்சு  
ஆச்சரிய மானதொரு பவளபீடம் வன்புடனே எந்தனுக்கு தருதலாச்சே

விளக்கவுரை :


4327. தந்துமே வடகோடி கானகத்தில் தண்மையுடன் பவளமென்ற காட்டையெல்லாம்
சொந்தமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி சுத்தமுள்ள சீனபதி பிழைக்கவென்று
அந்தமுடன் எந்தனுக்கு சொல்லியல்லோ வப்பனே யடிவணங்கி தெண்டனிட்டு
வந்ததொரு பாலனுக்கு வதிதஞ்சொல்ல வண்மையெல்லாம் அடியேனும் கண்டிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4328. கண்டேனே வளமான புதுமையெல்லாம் காட்டகத்தை சுத்தியல்லோ யானுங்கண்டேன்
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்காடு அழகான பவளமென்ற காடேயாகும்
கொண்டலிடி மேகமது யெழும்பும்நாடு கொற்றவர்கள் தாமறியா பவளநாடு
தண்டகாரணியமது சொல்லப்போமோ தாரணியில் கண்டவர்களில்லைதாமே

விளக்கவுரை :


4329. தானான கோட்டையது யென்னசொல்வேன் தண்மையுள்ள கதண்டுமகாரிஷியின்கோட்டை
பானான கோட்டைக்குள் சுரங்கமுண்டு பக்கமெல்லாம் பவழத்தால் தூணுண்டு
தேனான மனோன்மணியாள் பீடம்போல தேற்றமுடன் சித்தரமாம் மண்டபந்தான்
கோனான கதண்டுமகாரிஷியின்பாட்டன் கொற்றவனார் ஆசீர்மந் தனைக்கண்டேனே

விளக்கவுரை :


4330. கண்டேனே யடியேனும் ரிஷியார்தம்மை கனமுடனே காணுதற்கு பாலன்தானும்
தெண்டமுடன் ரிஷியாரும் என்னைக்கண்டு தெளிமையுடன் யாரென்று கேட்கலுற்றார்
அண்டியே குருபாதந் தனைவணங்கி அப்பனே யாதரிக்க வேண்டும்பாரு
சண்டமாருதம்போலே ரிஷியார்பாதம் தலைவணங்கி நடுநடுங்கி பணிந்திட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4321 - 4325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4321. பாரப்பா உந்தனையும் கண்டுதானும் பார்த்தாலே யுன்தலையைக்கொண்டுபோகும்
ஊரப்பா அதிலொருவர் போனதில்லை வுத்தமனே சிலநாளிங்கிருந்தாயானால்
சேரப்பா அமாவாசை பட்சந்தன்னில் சிறப்பான கதண்டுகளெல்லாங்கூடி
ஆரப்பா வுபதேசங்கேட்க வப்பனே வருமென்று சொல்லிட்டாரே

விளக்கவுரை :


4322. சொல்லவே போகரிஷி முனிவர்தானும் சொற்றவறா வணணமது யிருக்கவென்று
புல்லவே சிலநாளங்கிருந்தேன் யானும் பகழான கதண்டு மகாரிஷியார்பக்கல்
வல்லதொரு கதண்டுகளாம் கூட்டம்கூடி வண்மையுடன் ஞானோபதேசம் கேட்டு
செல்லவே கானகத்தைப்போகும்சேதி செம்மலுடன் யான்கண்டு நின்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4323. நின்றேனே நெடுநேரங் கால்நடுங்க நேர்மையுடன் கதண்டுமகாரிஷியார்தாமும்
குன்றான மலைதனிலே இருக்கும் வண்டை கொப்பெனவே தாமழைத்து வினயஞ்சொல்வார்
பன்றான பாலனிவன் யாரென்றாக்கால் பாருலகில் காலாங்கிசீஷனப்பா
தஎன்றிசையில் மலைகளெல்லாம் தான்கடந்து திக்கு ஜெயம்பெற்றுவந்த பாலன்தானே

விளக்கவுரை :


4324. தானான பாலனுக்கு கடுவெளியார்தாமும் தயவுடனே எந்தனுக்கு நியழஞ்செய்தார்
தேனான துதண்டுகளே யுந்தமக்கு தேற்றமுடன் யானுமல்லோ நியமஞ்செய்தேன்
கோனான காலாங்கி நாதர்பேரால் கொற்றவனார் போகரிஷி நாதருக்கு  
பானான பவளமென்ற காட்டையல்லோ பார்ப்பதற்கு இடமருளு மென்பார்தாமே

விளக்கவுரை :


4325. என்றாரே கதண்டுமகா ரிஷியார்தாமும் யெழிலான போகரிஷிநாதருக்கு
குன்றான மலைபோலே கதண்டுவெல்லாம் கொப்பெனவே போகரிஷிநாதருக்கு
நின்றுமே யஞ்சலிகள் மிகவுஞ்செய்து நீதியுள்ள காலாங்கி சீஷருக்கு
சென்றுமே தானழைத்து வனாந்திரத்தில் செம்மலுடன் ஆசனங்கள் கொடுக்கலாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4316 - 4320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4316. ஆச்சையா என்குருவே சாமிநாதா வன்புடனே தன்பாதங் காணவந்தோம்
மாச்சலுடன் சீனபதிவிட்டுமல்லோ மகத்தான போகரிஷி வந்தாரையா
பேச்சரியா போகரிஷிநாதருக்கு பேரான வுபதேசஞ் செய்யவேண்டும்
ஆச்சரியமானதொரு பவழக்காட்டை யவர்தமக்கு இன்பமுடன் அளிப்பீர்தானே

விளக்கவுரை :


4317. தாமென்ற புலிப்பாணி யின்னங்கேளு தகமையுள்ள கதண்டுமகா ரிஷியார்தாமும்
ஆமெனவே காலாங்கிநாதர்தம்மால் வன்புடனே எந்தன்மேல் கடாட்சம்வைத்து
ஏமெனவே யாசீர்வாதங்கள் சொல்லிஎழிலான காட்டகத்தை எந்தனுக்கு
போமெனவே விடைதந்து வுளவுஞ்சொல்லி பொங்கமுடன் வரந்தந்தார் ரிஷியார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4318. பாரேதான் காலாங்கி சீஷாகேளு பாங்குடனே சொல்லுகிறேனுந்தமக்கு
சேரேதா னிவ்வனத்துக் கிழக்கேயப்பா செயலான பவளத்தின் காட்டகந்தான்
நேரேதான் கானாறுகுகையுமுண்டு நீடான வாரிதியாங் கடலோரந்தான்
கூறான பவளமது யென்னசொல்வேன் கொற்றவனே யாருந்தான் போகொண்ணாதே

விளக்கவுரை :


4319. ஒண்ணாத காட்டகத்தில் தண்டுதானும் வுத்தமனே யுந்தனையுங் கொல்லும்பாரு
அண்ணாந்து பார்த்தாக்கால் சிரசும்போகும் வப்பனே அவ்வனத்தே சொல்லொண்ணாது
மண்ணாளும் ராஜாதிராசரெல்லாம் மகாவனத்தை வந்துமல்லோ மடிந்துபோனார்
குண்ணான மலைதனையே கண்டபோது கொற்றவனே குலைநடுங்கி இறந்தார்தாமே

விளக்கவுரை :


4320. இறந்தாரே லோகத்து மாண்பரெல்லாம் எழிலான காட்டகத்தைச் சென்றுமல்லோ
மறந்தாரே தேகாதி தேகந்தன்னை வையகத்தில் கோடியுண்டு லக்கோயில்லை
துறந்ததொரு ஞானிகளுமாண்டுபோனார் துப்புரவாய்த் திரும்பிவந்தோர் ஆருமில்லை
சிறந்ததொரு கானகத்தே சென்றாயானால் சீரான பாலகனே மடிவாய்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4311 - 4315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4311. ஆச்சப்பா மத்தகசந் தன்னைப்போல அழகான கதண்டுகளு மங்கேயுண்டு
பேச்சப்பா பேசுமுன்னே சிகரம்போகும் பேரான கதண்டுகளுமங்கேயுண்டு
மூச்சடங்க மேல்விழுகுங் கதண்டுதானும் முனையான குதிரையின் சிரசிபோலாம்
கூச்சலுடன் தானிருக்கும் வனந்தானப்பா குவலயத்தில் கண்டவர்கள் இல்லைதானே

விளக்கவுரை :


4312. தானான காலாங்கி சீஷவர்கேளும் தண்மையுள்ள கதண்டுமகாரிஷிதானப்பா
கோனான யென்பாட்டர் ரிஷிதானாகும் கொற்றவனே தண்டுமகா ரிஷியாசீர்மம்
தேனான காட்டகத்தைச் சென்றாயானால் தெளிவுடனே யுந்தனுக்கு வுளவுசொல்வார்
மானான ரிஷிமகாதேவர்தன்னால் மானிலத்தில் பவளமதைக்காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

4313. காணலாமென்று கடுவெள்யார்தாமும் கருத்துடனே எந்தனுக்குச் சொன்னாரங்கே
பூணவே யவர்பாதம் பின்னும்யானும் பொங்கமுடன் தொழுதிட்டேன் ரிஷியார்தாமும்
நீணவே எந்தனுக்கு யாசீர்மித்து நீதியுடன் எந்தனையு மழைத்துமல்லோ    
வேணபடி எந்தனுக்கு உதவிசொல்லி விருப்பமுடன் காட்டகத்தைச் சென்றார்பாரே

விளக்கவுரை :


4314. பாரேதான் கதண்டுமகாரிஷியார்பக்கல் பதிவுடனே எந்தனையும் கொண்டுசென்றார்
நேரேதான் கடுவெளியார் சித்துதாமும் நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
சீருடனே காலாங்கி சீஷனென்று செப்பிய யென்மீதில் கிருபைவைத்து
நீரேதான் இவர்தமக்கு வாசீர்மித்து நீட்டமுடன் வரந்தருக வென்றிட்டாரே

விளக்கவுரை :


4315. வென்றிட்ட போதையிலே ரிஷியார்தாமும் விருப்பமுடன் வுபதேசம் செய்யவென்று
சென்றிடவே தம்பக்கல் வழைத்துமல்லோ சிறப்பான காலாங்கி சீஷனென்று
என்றிடவே யிவர்தமக்கு பவழக்காட்டை யெழிலாகக் காணுதற்கு வரமுமீய
சென்றுமே தமதிடமும் வந்தாரையா சிறப்பான போகரிஷி யிவர்தானாச்ளே

விளக்கவுரை :


Powered by Blogger.