4311. ஆச்சப்பா மத்தகசந்
தன்னைப்போல அழகான கதண்டுகளு மங்கேயுண்டு
பேச்சப்பா பேசுமுன்னே
சிகரம்போகும் பேரான கதண்டுகளுமங்கேயுண்டு
மூச்சடங்க மேல்விழுகுங்
கதண்டுதானும் முனையான குதிரையின் சிரசிபோலாம்
கூச்சலுடன் தானிருக்கும்
வனந்தானப்பா குவலயத்தில் கண்டவர்கள் இல்லைதானே
விளக்கவுரை :
4312. தானான காலாங்கி சீஷவர்கேளும்
தண்மையுள்ள கதண்டுமகாரிஷிதானப்பா
கோனான யென்பாட்டர்
ரிஷிதானாகும் கொற்றவனே தண்டுமகா ரிஷியாசீர்மம்
தேனான காட்டகத்தைச்
சென்றாயானால் தெளிவுடனே யுந்தனுக்கு வுளவுசொல்வார்
மானான ரிஷிமகாதேவர்தன்னால்
மானிலத்தில் பவளமதைக்காணலாமே
விளக்கவுரை :
[ads-post]
4313. காணலாமென்று
கடுவெள்யார்தாமும் கருத்துடனே எந்தனுக்குச் சொன்னாரங்கே
பூணவே யவர்பாதம்
பின்னும்யானும் பொங்கமுடன் தொழுதிட்டேன் ரிஷியார்தாமும்
நீணவே எந்தனுக்கு
யாசீர்மித்து நீதியுடன் எந்தனையு மழைத்துமல்லோ
வேணபடி எந்தனுக்கு
உதவிசொல்லி விருப்பமுடன் காட்டகத்தைச் சென்றார்பாரே
விளக்கவுரை :
4314. பாரேதான்
கதண்டுமகாரிஷியார்பக்கல் பதிவுடனே எந்தனையும் கொண்டுசென்றார்
நேரேதான் கடுவெளியார்
சித்துதாமும் நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
சீருடனே காலாங்கி சீஷனென்று
செப்பிய யென்மீதில் கிருபைவைத்து
நீரேதான் இவர்தமக்கு
வாசீர்மித்து நீட்டமுடன் வரந்தருக வென்றிட்டாரே
விளக்கவுரை :
4315. வென்றிட்ட போதையிலே
ரிஷியார்தாமும் விருப்பமுடன் வுபதேசம் செய்யவென்று
சென்றிடவே தம்பக்கல்
வழைத்துமல்லோ சிறப்பான காலாங்கி சீஷனென்று
என்றிடவே யிவர்தமக்கு
பவழக்காட்டை யெழிலாகக் காணுதற்கு வரமுமீய
சென்றுமே தமதிடமும்
வந்தாரையா சிறப்பான போகரிஷி யிவர்தானாச்ளே
விளக்கவுரை :