4306. பாரேதா னின்னமொரு
மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் எனதையர் காலாங்கி
நாதர் நேர்மையுடன் எந்தனுக்கு வுரைத்தநீதி
சீரேதான் குளிகைகொண்டு
யடியேன்தானும் சிறப்புடனே அஷ்டதிசை சுத்தியல்லோ
வீரேதான் வடக்குமுகம்
போகும்போது வீரான கடுவெளியைக் கண்டேன்தானே
விளக்கவுரை :
4307. கண்டேனே கானகத்தில்
மார்க்கந்தன்னை கடுவெளியா மென்றதொரு சித்துகண்டேன்
அண்டியே யானுமல்லோ
வருகிற்சென்றேன் அங்ஙனவே யாரென்று என்னைக்கேட்க
விண்டதொரு கடுவெளியாஞ்
சித்தருக்கு விருப்பமுடன் காலாங்கி சீஷனென்றேன்
பண்டிதங்கள் மிகக்கேட்டு
என்னையல்லோ பட்சமுடன் ஆசீர்மம் செய்தார்காணே
விளக்கவுரை :
[ads-post]
4308. காணவே கடுவெளியாஞ்
சித்துதம்மை கனமுடனே யடியேனும் வணங்கியல்லோ
பூணவே காட்டகத்தைக்
காணவந்தேன் புனிதமுள்ள ரிஷியாரே விண்ணப்பங்கேள்
தோணவே பவளமென்ற காட்டகத்தை
தொல்லுலகில் யான்பார்க்கவேண்டுமென்றேன்
நீணவே யடியேனும்
கேட்கும்போது நீதியுடன் எந்தனுக்கு வுரைத்தார்தாமே
விளக்கவுரை :
4309. உரைத்தாரே கடுவெளியாஞ் சித்தர்தாமும் ஓகோகோ யினாறோநாதனென்று
வரையான முறைப்படியே
சித்துதாமும் வடகோடி கானகத்தைச் செல்லநன்னி
திரைபோன்ற காலுக்கு
வடக்கேயப்பா தீவாந்திரமானதொரு காடொன்றுண்டு
கரையான வழிதனையே கண்டதில்லை
காசினியில் அதிதமப்பா சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
4310. ஒண்ணாது யென்றல்லோ
சித்துதாமும் ஓகோகோ நாதாக்களறியாக்காடு
குண்ணான மலையதுவும்
கூறப்போமோ கூறான கதண்டுகளு மதிலேயுண்டு
என்னவே யாராலும் முடியாதப்பா
எழிலான சிங்கத்தின் தலையைப்போல
அண்ணாந்து பார்த்தவரை
யங்கேகொல்லும் அதவான வடகோடி மலைதானாச்சே
விளக்கவுரை :