4301. வாழ்கவென்றால்
லோகமதிலொன்றுமில்லை வையகத்தோர் வாழ்வெல்லா மிந்தவண்ணம்
மூழ்கியே போனார்கள்
கோடிமன்னர் மூதுலகில் இருந்தவர்கள் யாருமில்லை
மாழ்கியே நன்னிலையில்
நில்லாமற்றான் மதிகெட்டுப்போனவர்கள் கோடியுண்டு
பாழ்கியே லோகமதில்
வாசைவிட்டேன் கைலாயமெந்தனுக்குக் காணியாச்சே
விளக்கவுரை :
4302. ஆச்சப்பா சீஷவர்க்கஞ்
சொல்லக்கேளு வப்பனே சமாதிக்குச் சென்றபோது
மூச்சடங்கிப்போனதொரு
தேகந்தானும் மூதுலகில் மறுபடியும் வந்துமென்ன
மாச்சலுடன் வையகத்தை
யான்மறந்து வண்ணதனில் தேகமதையொழிப்பேனென்றும்
பாச்சலுடன்
சமாதிக்குப்போறேனென்றும் பான்மையுடன் ரிஷியாரு மிரங்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
4303. இறங்கவே சீஷவர்க்கமெல்லோருந்தான்
எழிலாகப் பாறைகொண்டு மூடினார்கள்
உறங்கவே மண்ணுதனில்
ரிஷியார்தாமும் வத்தமனார் தேகமதை மேவலாக்கி
மறந்தாரே தேகமதை
சொரூபர்தாமும் மானிலத்தில் விட்டொழித்து மண்ணில்சாய்ந்தார்
திறமுடனே சீஷரெல்லா
மாசீர்வாதம் செப்பினார் துரைராஜ வேந்தருக்கே
விளக்கவுரை :
4304. வேந்தராம் புலிப்பாணி
மைந்தாகேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் ரிஷியார்தம்மை
சாந்தமுடன் வுலகுதனில்
யாரிருந்தார் சட்டமுடன் தேகத்தை மறந்தார்சித்தர்
போந்தமுடன் வுலகுதனில்
யாருமில்லை பொன்னுலகம் பதிபோனார் மாண்பரெல்லாம்
நீத்தவே பொய்யான
வாழ்க்கைநம்பி நீனிலத்தில் வெகுகோடி கெட்டார்தாமே
விளக்கவுரை :
4305. கெட்டாரே மாண்பரெல்லாம்
யுககோடிகாலம் கெவனமுடன் நாதாக்கள் தெய்வமென்பார்
பட்டாரே பாருலகில்
மனிததெய்வம் பாரினிலே மனிதரே தெய்வமானால்
இட்டமொடு இன்னமொரு
தெய்வமென்ன எழிலான பூலோக வாழ்க்கையாவும்
சட்டமுடன் இப்படியே
இருக்குதல்லால் தாரிணியில் ஒன்றுந்தான் காணோம்பாரே
விளக்கவுரை :