4296. தானான சொற்பனங்கள்
அதிகங்காண்பார் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
பானான மிருகமெல்லாம்
பாஷைபேசும் பட்சிகளும் பரிபாஷை மிகவும்கூறும்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேசமெல்லாம் இருள்வந்து மூடிக்கொள்ளும்
பானான பரிதிமதி காணமாட்டார்
பாலகனே சமாதியது வெடிக்கும்பாரே
விளக்கவுரை :
4297. வெடிக்குமே சமாதிதனி லசரீரியுண்டாம் வேகமுடன் சித்துவருங்காலமாச்சு
துடிக்கவே
சீஷாதிவர்க்கமெல்லாம் துறையோடும் முறையோடும் சென்றாரங்கே
நடிக்கவே சித்தாதி
சித்தரெல்லாம் நலமுடனே ரோமரிஷி வந்தாரங்கே
முடிக்கவே சீஷர்முகந்
தன்னைநோக்கி முனையாக கேட்கலுற்றார் ரிஷியார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4298. தாமேதான் கேட்கையிலே
சீஷர்தாமும் தண்மையுடன் தாமுரைப்பார் ரிஷியாருக்கு
போமேதான் சமாதிதனில்
சென்றபோது பொங்கமுடன் தாமுரைத்த வர்க்கமெல்லாம்
வேமேதான் மேதினியில்
செய்யலாச்சு விருப்பமுடன் மகிமையெல்லாம் நடக்கலாச்சு
ஆமேதான் தாமுரைத்த
வர்க்கமெல்லாம் ஐயனே மெய்யாச்சி யென்றிட்டாரே
விளக்கவுரை :
4299. என்றிட்ட போதையிலே
ரிஷியார்தாமும் எழிலான தேகமதை நம்பொண்ணாது
சன்றிட்ட மாகவல்லோ
சமாதிக்கேக சட்டமுடன் ரோமரிஷி முன்வரதானும்
வென்றிடவே சீஷர்களை
மிகவிரும்பி விருப்பமுடன் சமாதிக்கு ஏகலாகி
சென்றிடவே பூலோக மாய்கையற்று
சிறப்புடனே சமாதிக்கு யேகினாரே
விளக்கவுரை :
4300. ஏகவே ரோமரிஷி முனியார்தாமும்
எழிலான சமாதிக்குச் செல்வேனென்று
சாகாமல் வையகத்தில்
இருந்துமென்ன சட்டமுடன் காயகற்பம் கொண்டுமென்ன
வேகமுடன்
சின்மயத்திலிருந்துகொண்டு விருப்பமுடன் வாசியோகஞ்செய்துமென்ன
யோகமது செய்துமல்லோ
கோடிகாலம் ஒன்றையுந்தான் காண்பதில்லை தேகவாழ்வே
விளக்கவுரை :