4291. தானான செந்தூர முண்டுமல்லோ
தன்மையுடன் சமாதிக்குப்போகவென்று
கோனான குருசொன்ன வாக்குதம்மை
குறையாமல் தன்மனதில்தான்நினைத்து
பானான சமாதிக்கு யிடமுந்தேடி
பட்சமுடன் சீஷர்களைத் தானழைத்து
மானான டில்லிக்கு
மேற்கோரமப்பா மகத்தான சமாதிக்கு இடங்கண்டாரே
விளக்கவுரை :
4292. கண்டாரே டில்லிக்கு
மேற்கேயப்பா கனமான ரோமரிஷி முனிவர்தானும்
அண்டர்முனி யறியாத
வனாந்திரத்தில் அங்ஙனவே சமாதிக்கு யிடமுங்கண்டு
தொண்டரெனுஞ்
சீஷவர்க்கமானபேரை துரைராஜ சுந்தரனார் தாமழைத்து
விண்டிடவே சமாதியது
தோண்டுதற்கு வருப்பமுடன் வுத்தாரஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4293. பாரேதான் சீஷவர்க்க
மாண்பரோடு பாங்குடனே சமாதியதில் இறங்கவென்று
நேரேதான் சீஷர்முகந்
தன்னைநோக்கி நேர்மையுடன் தாமுரைப்பார் ரிஷியார்தாமும்
கூரேதான் சமாதிக்குப்
போரேனப்பா கொற்றவனே இருபதுவாண்டுமட்டும்
சீரேதான் வையகத்தை
யான்மறந்து சிறப்புடனே இருப்பே னென்றுரைத்தார்தாமே
விளக்கவுரை :
4294. தாமான சமாதிக்குப்
போகுமுன்னே தகமையுடன் ரிஷியாருந் தாமுரைப்பார்
சாமான மானதொரு சீஷர்தம்மை
தன்மையுடன் பக்கலில்தாமழைத்து
கோமானாம் ராஜாதிராசர்தம்மால்
கொற்றவனா யிடையூறு யெதுநேர்ந்தாலும்
நாமான சொற்படியே
என்னைத்தானும் நலமான சமாதியது திறக்கொண்ணாதே
விளக்கவுரை :
4295. ஒண்ணாது சமாதிவிட்டு
வருகும்போது வுத்தமனே சந்தனமும் மலரும்பாரு
நண்ணாது தேவதா புட்பந்தானும்
நண்மையுடன் சமாதிசுத்திப் பூத்திருக்கும்
திண்ணமுடன் பாரிசாத
புட்பமப்பா திடமான நாடெல்லாம் பூத்திருக்கும்
எண்ணமுடன் சித்தாதி
சித்தரெல்லாம் எழிலான சொற்பனமும் காண்பார்தாமே
விளக்கவுரை :