4316. ஆச்சையா என்குருவே சாமிநாதா
வன்புடனே தன்பாதங் காணவந்தோம்
மாச்சலுடன்
சீனபதிவிட்டுமல்லோ மகத்தான போகரிஷி வந்தாரையா
பேச்சரியா போகரிஷிநாதருக்கு
பேரான வுபதேசஞ் செய்யவேண்டும்
ஆச்சரியமானதொரு பவழக்காட்டை
யவர்தமக்கு இன்பமுடன் அளிப்பீர்தானே
விளக்கவுரை :
4317. தாமென்ற புலிப்பாணி யின்னங்கேளு தகமையுள்ள கதண்டுமகா ரிஷியார்தாமும்
ஆமெனவே காலாங்கிநாதர்தம்மால்
வன்புடனே எந்தன்மேல் கடாட்சம்வைத்து
ஏமெனவே யாசீர்வாதங்கள்
சொல்லிஎழிலான காட்டகத்தை எந்தனுக்கு
போமெனவே விடைதந்து
வுளவுஞ்சொல்லி பொங்கமுடன் வரந்தந்தார் ரிஷியார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4318. பாரேதான் காலாங்கி சீஷாகேளு
பாங்குடனே சொல்லுகிறேனுந்தமக்கு
சேரேதா னிவ்வனத்துக்
கிழக்கேயப்பா செயலான பவளத்தின் காட்டகந்தான்
நேரேதான் கானாறுகுகையுமுண்டு
நீடான வாரிதியாங் கடலோரந்தான்
கூறான பவளமது யென்னசொல்வேன்
கொற்றவனே யாருந்தான் போகொண்ணாதே
விளக்கவுரை :
4319. ஒண்ணாத காட்டகத்தில்
தண்டுதானும் வுத்தமனே யுந்தனையுங் கொல்லும்பாரு
அண்ணாந்து பார்த்தாக்கால்
சிரசும்போகும் வப்பனே அவ்வனத்தே சொல்லொண்ணாது
மண்ணாளும் ராஜாதிராசரெல்லாம்
மகாவனத்தை வந்துமல்லோ மடிந்துபோனார்
குண்ணான மலைதனையே கண்டபோது
கொற்றவனே குலைநடுங்கி இறந்தார்தாமே
விளக்கவுரை :
4320. இறந்தாரே லோகத்து
மாண்பரெல்லாம் எழிலான காட்டகத்தைச் சென்றுமல்லோ
மறந்தாரே தேகாதி தேகந்தன்னை
வையகத்தில் கோடியுண்டு லக்கோயில்லை
துறந்ததொரு
ஞானிகளுமாண்டுபோனார் துப்புரவாய்த் திரும்பிவந்தோர் ஆருமில்லை
சிறந்ததொரு கானகத்தே
சென்றாயானால் சீரான பாலகனே மடிவாய்பாரே
விளக்கவுரை :