4321. பாரப்பா உந்தனையும்
கண்டுதானும் பார்த்தாலே யுன்தலையைக்கொண்டுபோகும்
ஊரப்பா அதிலொருவர் போனதில்லை
வுத்தமனே சிலநாளிங்கிருந்தாயானால்
சேரப்பா அமாவாசை
பட்சந்தன்னில் சிறப்பான கதண்டுகளெல்லாங்கூடி
ஆரப்பா வுபதேசங்கேட்க வப்பனே
வருமென்று சொல்லிட்டாரே
விளக்கவுரை :
4322. சொல்லவே போகரிஷி
முனிவர்தானும் சொற்றவறா வணணமது யிருக்கவென்று
புல்லவே சிலநாளங்கிருந்தேன்
யானும் பகழான கதண்டு மகாரிஷியார்பக்கல்
வல்லதொரு கதண்டுகளாம்
கூட்டம்கூடி வண்மையுடன் ஞானோபதேசம் கேட்டு
செல்லவே
கானகத்தைப்போகும்சேதி செம்மலுடன் யான்கண்டு நின்றிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4323. நின்றேனே நெடுநேரங்
கால்நடுங்க நேர்மையுடன் கதண்டுமகாரிஷியார்தாமும்
குன்றான மலைதனிலே இருக்கும்
வண்டை கொப்பெனவே தாமழைத்து வினயஞ்சொல்வார்
பன்றான பாலனிவன்
யாரென்றாக்கால் பாருலகில் காலாங்கிசீஷனப்பா
தஎன்றிசையில் மலைகளெல்லாம்
தான்கடந்து திக்கு ஜெயம்பெற்றுவந்த பாலன்தானே
விளக்கவுரை :
4324. தானான பாலனுக்கு
கடுவெளியார்தாமும் தயவுடனே எந்தனுக்கு நியழஞ்செய்தார்
தேனான துதண்டுகளே யுந்தமக்கு
தேற்றமுடன் யானுமல்லோ நியமஞ்செய்தேன்
கோனான காலாங்கி நாதர்பேரால்
கொற்றவனார் போகரிஷி நாதருக்கு
பானான பவளமென்ற காட்டையல்லோ
பார்ப்பதற்கு இடமருளு மென்பார்தாமே
விளக்கவுரை :
4325. என்றாரே கதண்டுமகா ரிஷியார்தாமும் யெழிலான போகரிஷிநாதருக்கு
குன்றான மலைபோலே
கதண்டுவெல்லாம் கொப்பெனவே போகரிஷிநாதருக்கு
நின்றுமே யஞ்சலிகள்
மிகவுஞ்செய்து நீதியுள்ள காலாங்கி சீஷருக்கு
சென்றுமே தானழைத்து
வனாந்திரத்தில் செம்மலுடன் ஆசனங்கள் கொடுக்கலாச்சே
விளக்கவுரை :