போகர் சப்தகாண்டம் 4326 - 4330 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4326 - 4330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4326. ஆச்சப்பா அடியேனும் காட்டகத்தே வன்புடனே எந்தனையுங் கொண்டுசென்று
மாச்சலுடன் கதண்டுகளு மொன்றாய்க்கூடி மார்க்கமுடன் பவழக்கால் ஆசீர்மத்தில்
வீச்சுடனே சிம்மாதனம் ஏற்றியென்னை விருப்பமுடன் சங்கீதம்பாடலாச்சு  
ஆச்சரிய மானதொரு பவளபீடம் வன்புடனே எந்தனுக்கு தருதலாச்சே

விளக்கவுரை :


4327. தந்துமே வடகோடி கானகத்தில் தண்மையுடன் பவளமென்ற காட்டையெல்லாம்
சொந்தமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி சுத்தமுள்ள சீனபதி பிழைக்கவென்று
அந்தமுடன் எந்தனுக்கு சொல்லியல்லோ வப்பனே யடிவணங்கி தெண்டனிட்டு
வந்ததொரு பாலனுக்கு வதிதஞ்சொல்ல வண்மையெல்லாம் அடியேனும் கண்டிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4328. கண்டேனே வளமான புதுமையெல்லாம் காட்டகத்தை சுத்தியல்லோ யானுங்கண்டேன்
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்காடு அழகான பவளமென்ற காடேயாகும்
கொண்டலிடி மேகமது யெழும்பும்நாடு கொற்றவர்கள் தாமறியா பவளநாடு
தண்டகாரணியமது சொல்லப்போமோ தாரணியில் கண்டவர்களில்லைதாமே

விளக்கவுரை :


4329. தானான கோட்டையது யென்னசொல்வேன் தண்மையுள்ள கதண்டுமகாரிஷியின்கோட்டை
பானான கோட்டைக்குள் சுரங்கமுண்டு பக்கமெல்லாம் பவழத்தால் தூணுண்டு
தேனான மனோன்மணியாள் பீடம்போல தேற்றமுடன் சித்தரமாம் மண்டபந்தான்
கோனான கதண்டுமகாரிஷியின்பாட்டன் கொற்றவனார் ஆசீர்மந் தனைக்கண்டேனே

விளக்கவுரை :


4330. கண்டேனே யடியேனும் ரிஷியார்தம்மை கனமுடனே காணுதற்கு பாலன்தானும்
தெண்டமுடன் ரிஷியாரும் என்னைக்கண்டு தெளிமையுடன் யாரென்று கேட்கலுற்றார்
அண்டியே குருபாதந் தனைவணங்கி அப்பனே யாதரிக்க வேண்டும்பாரு
சண்டமாருதம்போலே ரிஷியார்பாதம் தலைவணங்கி நடுநடுங்கி பணிந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar