போகர் சப்தகாண்டம் 4331 - 4335 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4331 - 4335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4331. பணிந்துமே நிக்கையிலே சீஷவர்க்கம் படைமீறி யென்மேலே பேர்பொருந்த
அணியணியாய் திரள்கூட்டமதிகமாகி அங்ஙனவே கொல்லுதற்கு யெண்ணங்கொண்டு
துணிவுடனே சுகிப்பதற்கு கிட்டேநேர்ந்து துப்புறவாய் என்மேலே வினையுங்கொண்டு
மணியான யோகீஸ்வரன் முதலோர்தானும் மார்க்கமுடன் எந்தனையும் சூழ்ந்தார்பாரே

விளக்கவுரை :


4332. பாரப்பா சீஷவர்க்கம் சொன்னபோது பாருலகில் யானுமல்லோ திடுக்கிட்டேங்கி
தேரப்பா தரம்போல நின்றுவிட்டேன் தெளிமையுடன் அவர்பாதம் தொழுதேன்நானும்
காரப்பா யென்றுரைத்து கரமெடுத்து கர்த்தாவே ரட்சிக்க வேண்டுமென்றேன்
ஆரப்பா காலாங்கி சீஷர்தன்னால் வப்பனே யுந்தனையும் மதித்தோம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4333. மதித்தோமே காலாங்கி கடாட்சத்தாலே மகதேவரெங்களுக்கு குருவுமாச்சு
விதிப்படியே யவர்களுக்கு வஞ்சலித்தேன் வீரான சீஷரெல்லாம் மன்னித்தார்கள்
துதிப்புடைய பாலனென்று என்னைத்தானும் துரைராஜ காலாங்கிசீஷனென்று
மதிபோன்ற மனந்தனிலே யுன்னியல்லோ மார்க்கமுடன் சினமதுவை நீக்கினாரே

விளக்கவுரை :


4334. நீக்கியே எந்தன்மேல் பட்சம்வைத்து நீதியுடன் யாதரிக்க வேண்டுமென்று
நோக்கமுடன் போகரிஷி முனிவர்தாமும் நொடியான பவமகற்றி காக்கவேணும்
வாகுடனே எந்தனுக்கு வரமுந்தந்து வண்மையுடன் பாதுகாத் தருளென்றார்பார்
நாக்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்பாதம் நன்மையுடன் வணங்கியல்லோ பணிந்திட்டேனே

விளக்கவுரை :


4335. பணிந்துமே நிற்கையிலே சீஷர்தாமும் பாங்குடனே எந்தன்மேல் பட்சம்வைத்து
அணிந்ததொரு பவளமென்ற வாரந்தன்னை அப்பனே என்கழுத்தில் சாற்றினார்கள்
துணிந்துமே யடியஏனும் தாள்பணிந்து துப்புறவாய் யானுமல்லோ வஞ்சலித்தேன்
கணிந்துமே பவளத்தின் வுளவுசொல்லி கருவான வாரிதியை காண்பித்தாரே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar