போகர் சப்தகாண்டம் 4336 - 4340 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4336 - 4340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4336. கண்டேனே சத்தசாகரமுங் கண்டேன் கனமான பவளமென்ற கடல்தானப்பா
விண்டேனே நாதாக்கள் கைமறைப்பு வேதாந்தத் தாயினது கடல்மறைப்பு
உண்டான மகிமையெல்லாம் யானுங்கண்டேன் ஓகோகோ நாதாக்கள் சூட்சங்கண்டேன்
திண்டான பவழத்தின் விளைவுகண்டு தீரமுடன் சீனபதியேகினேனே

விளக்கவுரை :


4337. ஏகவே யடியேனும் காட்டைவிட்டு யெழிலான சீனபதிபோறேனென்றேன்
சோகமுடன் எந்தனுக்கு வெகுமானங்கள் தொல்லுலகில் தான்கொடுத்தார் சீஷவர்க்கம்
வேகமாம் பவளசிம்மாதனங்கள் விருப்பமுடன் எந்தனுக்கு யாவுந்தந்து
போகரென்ற போதனையே மெச்சவேதான் போவென்றார் சீனபதி வந்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4338. வந்தேனே காலாங்கி கிருபையாலே வளமுடைய கதண்டுமகாரிஷியாசீர்மம்
அந்தமுடன் கண்டல்லோ வடியேன்தானும் அடைவான பவளமென்ற கடலைத்தாண்டி
சொந்தமுள்ள சீனபதி தேசத்துக்கு துப்புறவாய் வந்தல்லோ பெண்களுக்கு    
வந்தையது தானுரைத்தேன் வெகுசதாக மேதினியில் என்னைமெச்சி யணைத்திட்டாரே

விளக்கவுரை :


4339. அணைந்துமே சீனபதி பெண்களுக்கு அழகான பவளமென்ற மாலைதன்னை
மணங்கமழும் மார்பதனிற் பதங்கமாலை மார்க்கமுடன் தான்கொடுத்தார் பரிசனந்தான்
இணக்கமுடன் பவளமென்ற கடல்தானப்பா யெழிலான காட்டகத்தை தாமுறைத்து
கணக்கமது வாராமல் சீனத்தார்க்கு சூட்சமதை வெளியிட்டார் போகர்தாமே

விளக்கவுரை :


4340. தாமான யின்னமொரு கருமானந்தான் தகமையுள்ள சீனபதி யுலகத்தார்க்கு
போமெனவே கண்டுவந்த வதிசயத்தை பொங்கமுடன் தாமுரைத்தார் போகர்தாமும்
நாமெனவே எழுகடலுஞ்சுத்தி வந்தேன் நாதாக்கள் மகிமைதனை யானுங்கண்டேன்
நேமெனவே டில்லிக்கு வடபாகத்தில் நேர்மையுடன் ஆசீர்மந்தன்னைக்கண்டேன்

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar