போகர் சப்தகாண்டம் 4341 - 4345 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4341 - 4345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4341. கண்டேனே நாதாக்கள் கண்டதில்லை காலாங்கி நாதருட கிருபையாலே
அண்டர்முனி ராட்சதருங் கண்டதில்லை யவ்வனத்தே மாண்பர்களும் போனதில்லை
தொண்டுசெய்து யடியேனும் வெகுகாலந்தான் தோற்றமுடன் தேசமெல்லாஞ் சுத்திவந்தேன்
விண்டவர்கள் யாரேனுங் கண்டதில்லை வீரான கடுவெளியார் வனந்தானாமே

விளக்கவுரை :


4342. வனமான கடுவெளியார் நாடுகண்டேன் வண்மையுள்ள சித்தொளிவைக் கண்டேன்யானும்
தினகரணுங் காணாத வாசீர்மந்தான் திகழான கடுவெளியார் சித்துநாடு
கிண்ணிடனே மேகமது தங்கும்நாடு புகழான திருப்பாலின் கடலோரந்தான்
மனமுடைய சித்துமகாரிஷிகள்நாடு மகத்தான கடுவெளியார் சித்துநாடே

விளக்கவுரை :

[ads-post]

4343. நாடான கடுவெளியார் சித்துநாடு நலமுடனே குளிகையது கொண்டுயானும்
காடான வாசீர்மந் தன்னைக்கண்டேன் கடுவெளியார் வுபதேசம் யானும்பெற்றேன்
தாடாண்மையுள்ளதொரு பலமுங்கொண்டேன் தாக்கான ரிஷியினுட பலத்தினாலே
கேடான கோடிவடகானகத்தில் கொப்பெனவே யாசீர்மம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4344. பார்த்தேனே பவளமென்ற கடலோரத்தை பாங்குடனே யான்கண்டு வதிசயித்தேன்
தீர்த்தமுடன் கானாறுகுகைதான்சென்று திரளான பவளமென்ற காட்டைக்காண
நேர்த்தியுடன் கடுவெளியார் எந்தன்மீது நேர்மையுடன் அதிசயித்து சொன்னசொல்லை
பூர்த்தியாய் கடுவெளியார் பட்சம்வைத்து புகழாக எந்தனுக்கு விடைசொன்னாரே

விளக்கவுரை :


4345. சொன்னாரே எந்தனையுந்தானழைத்து சுத்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு
மன்னான காலாங்கிநாதர்தம்மை மகத்தான சீடனிவன் போகரென்று
முன்னோர்கள் ரிஷிமுனிவர் துதிக்கும்போகர் மூதுலகில் கீர்த்திபெற்ற சீஷனென்று
பன்னியே பலகாலும் பட்சம்வைத்து பாங்குபெற வுத்தாரஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar