போகர் சப்தகாண்டம் 4416 - 4420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4416. உண்டான பொத்கைமலை தன்னிலப்பா வுத்தமனே சல்லியசாத்திரத்தின்மார்க்கம்
கண்டுமே யடியேனும் மிகவாராய்ந்து கருத்துடனே தானெடுத்தேன் கோடியுண்டாம்
வண்டமிழ்சொல் வங்கத்தார் கூட்டங்கூடி வளமான நிதிகளெல்லா மெனக்குப்பாதி
கொண்டுபோ மென்றுசொல்லி விடைதந்தார்கள் கொற்றவர்கள் சங்கத்தார் புலவர்தாமே

விளக்கவுரை :


4417. தாமான நிதிகளெல்லாம் அடியேன்தானும் தன்மையுடன் ஜெயமுனியார் பக்கலாக
பூமானாம் ரிஷியின் மகாதேவர்பக்கம் பொங்கமுடன் கொண்டல்லோ யொப்பிவைத்தேன்
சாமானமானதொரு திரவியத்தை சட்டமுடன் எந்தனுக்காய் கொடுத்துவிட்டார்
ஆமானமாகவே யடியேன்தானும் வன்புடனே சீனபதிக் கொடுசென்றேனே

விளக்கவுரை :

[ads-post]

4418. சென்றேனே திரவியங்கள் அனைத்துமல்லோ சிறப்புடனே யானுமல்லோ சீனத்தார்க்கு
குன்றான திரவியங்கள் செம்பொன்னெல்லாம் கொட்டினேன் மலைபோல தங்கமப்பா
என்றன்மேல் பட்சம்வைத்து நிதிகள்தம்மை எழிலாகத்தான் கேட்டார்சீனத்தார்கள்
வென்றிடவே ஜெயமுனியாரைக்கண்டேன் வேதாந்த ரிஷியாரும் அருள்செய்தாரே

விளக்கவுரை :


4419. அருளான மகிமையது மெத்தவுண்டு வன்பான சீனபதிமார்க்கத்தோரே
பொருளான திரவியங்கள் எடுப்பதற்கு பொங்கமுடன் வித்தைமிகக் கற்றுவந்தேன்
தெருளான தேசமெல்லாம் திரிந்துமேதான் தேற்றமுடன் தென்பொதிகை கொண்டுசென்றார்
இருளான காட்டையதை யான்கடந்து யெழிலான தென்பொதிகை கண்டிட்டேனே

விளக்கவுரை :


4420. கண்டேனே பொதிகைமலை கடலோரந்தான் கானாறுவோடைமுதல் தான்கடந்து
அண்டமுனி ராட்சதர்கள் காணாநாடு அழகான தென்பொதிகை சாரலப்பா
தண்டலங்கள் தாமறியார் கடலோரந்தான் தகமையுள்ள சாரலது கொண்டுசென்றார்
விண்டலமும் அறியாத குண்ணுவப்பா வீராறு சுனையருகில் சென்றேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4411 - 4415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4411. சொல்லவே யடியேனும் மனதுவந்து துப்புரவாய் ஞானந்தனைமறந்து
வெல்லவே மெய்ஞானமுட்புகுந்து மேதினியில் யானுமொரு சித்தனாகி
சச்லியங்கள் சாத்திரங்கள் மிகவும்கற்று தாரிணியில் கருவாளி யானுமாகி
தெள்ளியமாய் வித்தைதனில் முதல்வனாகி தேசத்தில் வஞ்சனமாஞ் சித்தானேனே

விளக்கவுரை :


4412. சித்தானேன் சிலகாலஞ் சென்றுயானும் ஜெயமுனியார் பாதாரவிந்தத்தாலே
சத்தான லோகமதில் இருக்குந்தானம் தகமையுள்ள நிதிகளெல்லாந் தானெடுக்க
எத்தனங்கள் மிகச்செய்து புனிதவானாய் எழிலான சாத்திரத்தை கையிலேந்தி
முத்தான யுலகமெலாம் மிகமதிக்க வுத்தமனே திரிந்தேனே போகர்தானே

விளக்கவுரை :

[ads-post]

4413. போகரென்று சொல்லவென்றால் லோகந்தன்னில் பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க
யோகமுடன் திக்கெல்லாம் திரண்டுமல்லோ எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள்
சாங்கமுடன் கண்டல்லோ யடியேனுக்கு சட்டமுடன் சோடசோபசாரஞ்செய்து
வேகமுடன் நிதியெடுக்க எந்தனைத்தான் மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


4414. கோடியாம் நிதியெடுக்க என்னைத்தானும் கொற்றவர்கள் கூட்டியல்லோ தேசந்தன்னில்
நீடியே திரவியங்கள் கண்டெடுக்க நிட்களமாய் வுறுதிமிகப்பாடுசெய்து
நாடியே சாத்திரத்தி னுளவுபார்த்து நாதாந்த சித்தொளிவை மனதிலுண்ணி
வாடியே திரியாமல் அடியேன்தானும் வண்மையுடன் கொடுக்கலுற்றேன் நிதிகள்தானே

விளக்கவுரை :


4415. கானான நிதிகளது எடுக்கலென்ன தட்சணமும் மலையமுனிவாசீர்மத்தில்
கேனான குருக்கள்முதல் சித்துயாவும் கூட்டியே யெனையழைத்து கொண்டுசென்றார்
மானான மனோன்மணியாள் கிருபையாலே மகத்தான நிதியெடுக்க சென்றேனங்கே
தேனான தென்மலையாங் கடலோரத்தில் தேற்றமுடன் யான்சென்றேன் பதிதானுண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4406 - 4410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4406. எய்யுமே சாபம்வருமென்றுமல்லோ எழிலான சீஷவர்க்கம் கூறும்போது
பையவே எந்தனுக்கு பயமுமாகி பாரமுடன் கைசோர்ந்து மெய்யுஞ்சோர்ந்து
நையவே யடியேனுஞ் சீடர்தம்மை நடுக்கமுடன் யானுமல்லோ வஞ்சலித்து
துய்யவே காலாங்கி சீடனென்றேன் துரைராசர் எந்தனையும் மன்னித்தாரே

விளக்கவுரை :


4407. மன்னித்து எந்தனுக்கு சாபந்தன்னை மதிப்புடனே ஜெயமுனியார் பக்கல்சென்று
கன்னியமாய் ஜெயமுனியார் தன்னைநோக்கி கர்த்தாவாம் சித்துமுனி யடிபணிந்து
இன்னிலத்தில் சீனபதி மனிதன்தானும் எழிலான குளிகையது பூண்டுகொண்டு
துன்னீலங் கண்ணானாம் போகநாதன் துப்புறவாய்க் காணவல்லோ வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4408. வந்தாரே போகரிஷியென்றுதாமும் வளமாகத்தாமுரைத்தார் சீஷவர்க்கம்
அந்தமுடன் ஜெயமுனிக்குக் கூறும்போது வன்புள்ள ஜெயமுனியார் ரிஷியார்தாமும்
சொந்தமுடன் ரிஷியாரும் அன்புகூர்ந்து சுத்தமுடன் எந்தனையும் வரவழைத்து
சிந்தனையாய் காலாங்கிசீடாகேளு சிற்பரனே வந்ததினால் குற்றமாச்சே

விளக்கவுரை :


4409. ஆச்சப்பா போகமுனி சொல்லக்கேளும் அன்பான யென்வார்த்தை யுந்தனுக்கு
பாச்சலுடன் சீனபதிவிட்டுமல்லோ பாருலகில் வந்ததொரு வதிசயங்கள்
மாச்சலுடன் யென்னவதிசயங்கள்காண மன்னவனே யேன்வந்தாயென்றுகேட்க
நீச்சமுடன் அடியேனும் மிகநடுங்கி நிஷ்களமாய்த் தானுரைத்தேன் உண்மைதானே

விளக்கவுரை :


4410. உண்மையாய் யடியேனும் உரைத்தபோது உத்தமனார் ஜெயமுனியார் எந்தனுக்கு
நன்மைபெற உபதேசம் மிகவுஞ்செய்து தீரமுடன் சகலகலைக் கியானமெல்லாம்
வண்மையுடன் எந்தனுக்கு உபதேசித்து வகைமான் தொகைமானம் சொல்லிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4401 - 4405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4401. பாரேதான் குளிகைகொண்டு செல்லும்போது பாங்கான வழிதடமும் அனேகங்கண்டேன்
நேரேதான் டில்லிக்குத் தென்கிழக்கே நேர்மையுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான்
சீரேதான் அவ்விடத்தி லுள்ளமாண்பர் சிறப்புடனே எனைவந்து கண்டாரங்கே
ஊரேதான் குருப்படைகள் யாவுங்கண்டு வுத்தமர்கள் எந்தனுக்கு துதிசொன்னாரே

விளக்கவுரை :


4402. துதித்துமே எந்தனிட பக்கல்வந்து துறையோட முறையோடும் அஞ்சலித்து
மதிப்புடனே எந்தனையும் யாரென்றார்கள் மகத்தான மாண்பரெல்லாங் கூட்டங்கூடி
பதியான மாநகரம் வதிசயங்கள் பாரினிலே இதுவரையில் கண்டதில்லை  
ததிதாகத் தோற்றுகுது யென்றுமல்லோ புத்தியுடன் மாண்பரெல்லாம் மயங்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

4403. மயங்கியே மாண்பரெல்லாங் கூட்டங்கூடி மகத்தான ஜெயமுனிவர் சீடர்பக்கல்
தயங்கியே சீடர்களைத்தானும் பார்த்துத் தாரிணியில் புதுமையிது யாங்கள்கண்டோம்
நயம்புடனே சீனபதிதேசம்விட்டு நலமான காலாங்கி சீடன்தானும்
செயமுடனே குளிகைகொண்டு யிங்குவந்தார் சீரான மகத்துவங்கள் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


4404. ஒண்ணாது சீடவர்க்கமானபேர்கள் ஓகோகோ நாதாக்கள் யாரோவென்று
நண்ணியே தன்மனதில் தானடக்கி யேகாந்த சித்தொளிவைக்காணவென்று
எண்ணியே சீஷவர்க்கமாயிரம்பேர் நலமுடனே எந்தனையுங் காணவென்று
வண்ணமுடன் எந்தனை யாரென்றுகேட்க வண்மையுடன் காலாங்கி சீடனென்றேன்

விளக்கவுரை :


4405. யென்றேனே யடியேனும் சொல்லும்போது எழிலான சீஷவர்க்மெந்தனுக்கு
வென்றிடவே காலாங்கி சீடர்களும் வீராகக் கானகத்தில் வரலாமோசொல்
குன்றான மலையுண்டு குகைதானுண்டு குவலயத்தில் மாமுனிவர் கண்டதில்லை
இன்றுநீ வந்ததினால் உந்தனுக்கு எழிலான சாபமது வெய்தும்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.