போகர் சப்தகாண்டம் 4251 - 4255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4251. நிற்கையிலே மனோன்மணியால் கிருபையாலே நீடான வசரீரிகேட்கும்பாரு
அற்பமென்று நினையாதே வன்பாகேளு அவனியிலே நான்வருகுங்காலந்தன்னில்
சிற்பரன்போலுந்தனுக்கு சொற்பனங்கள் சீராகத் தானடக்கும் வருள்மைந்தாகேள்
உற்பமுடன் சொற்பனத்தில் நான்வந்தாற்போல் வுத்தமனே வதிசயங்கள் நடக்குந்தானே

விளக்கவுரை :


4252. தானான லோகமது இருண்டுபோகும் தாக்கான கடலதுதான் பொங்கும்பாரு
மோனான நாதாக்கள் இறந்தபேர்கள் மோனமென்ற சமாதியது யொளிக்கும்பாரு
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவாகக் கண்ணின்முன் நிற்பார்பாரு
பானான நாலுயுக வதிசயங்கள் பட்சமுடன் தாமுரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4253. சித்தான தேறையர் முனிவர்தானும் சிறப்புடனே கூறலுற்றார் இந்தவண்ணம்
பத்தான ரிஷியாருஞ் சமாதிவிட்டு பட்சமுடன் தானடக்க வழியுஞ்சொல்வார்
முத்தான தேகமதை வுலகிற்காண முனியான தேறையர் சமாதிதானும்
புத்தான பாறையதுதான்வெடித்து புகழாகச் சமாதிவட்டு வெளிவந்தாரே

விளக்கவுரை :


4254. வெளியாக சித்துமுனி வந்தபோது வெற்றிபெற சீஷருக்குத்தானுரைப்பார்
தெளிவான சாஸ்திரங்கள் கற்றுமென்ன தேகாதி காயகற்பங்கொண்டுமென்ன
பளியான தேகமதை வையகத்தில் பட்சமுடன் காப்பாற்றி நிறுத்தியென்ன
குளியான சமாதியிடஞ் சென்றுமென்ன குவலயத்திலிருந்தாலும் ஒன்றுங்காணே

விளக்கவுரை :


4255. காணேனே பஞ்சபூதத்தினாசை கடிதான தேகமது நிலைநில்லாது
பூணவே வரைகோடி யிருந்துமென்ன பூவுலகில் சடலமது வழிந்துபோகும்
தோணவே யில்லாவே யிடுகாடாகும் துப்புறவாய் சொந்தநகர் புறங்காடாகும்
மாணவே வையகத்தினாசையெல்லாம் மறப்பதுவே வண்மையுள்ள வதிதமாமே

விளக்கவுரை :





போகர் சப்தகாண்டம் 4246 - 4250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4246. பெற்றேனே மறுபடியுஞ் சமாதியேக பெருமையுடன் இருபதுவாண்டுமட்டும்
கற்பறிந்தேன் ஞானோபதேசங்கேட்டு காசினியில் ஆசையற்றுசமாதிபூண
சிற்றறிவு வுடையதொரு பாலன்யானும் சீராக சமாதிக்குப் பாத்திரனாவாய்
குற்றமில்லா வரைகடந்து யடியேன்யானும் குருபதத்தை நாடியல்லோ வந்திட்டேனே

விளக்கவுரை :


4247. வந்தேனே சீஷவர்க்கந் தன்னோடொக்க வகையான நர்மதா மலையைத்தேடி
அந்தமுடன் சமாதிக்கு இடமுங்கண்டார் வன்பான சீஷவர்க்கமான பேர்கள்
சொந்தமதாய்க் குழிதோண்டுஞ் சமாதிதன்னை கந்தாரே தாயிருக்கக் கண்டேன்யானும்
முந்தவே யான்கண்டசொற்பனம்போல் முடிந்துதே விட்டகுறை வாய்க்கலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4248. ஆச்சென்று தேறையசித்துதாமும் வன்பாக ரிஷியார்க்குத் தாமுரைக்க
மூச்சடங்கி சிலகாலம் எந்தன்பக்கல் முடிவான வாண்டுவரு முடிவுமட்டும்
வீச்சுடனே சமாதியது யிருக்கவென்று விருப்பமுடன் ரிஷியாரும் வாக்களித்தார்
பாச்சலென்ற சுவாசமது தானடக்கி பட்சமுடன் தானிருக்க வரந்தந்தாரே

விளக்கவுரை :


4249. வரமுடனே தான்கொடுத்து ரிஷியார்தாமும் வண்மையுடன் ஆசீர்மஞ்சொன்னாரங்கே
சரமுடைய வார்த்தையென்ற மொழிக்கித்தானும் தப்பாமல் சமாதிக்குள் சென்றாரங்கே
திறமுடைய தேறையர் சித்துதாமும் தீர்க்கமுடன் சீஷருக்கு வோதலுற்றார்  
குறமுடைய ரிஷியாரும் சீஷருக்கு கூறுவார் அதிசயங்கள் மிகவாய்த்தானே

விளக்கவுரை :


4250. தானேதான் சமாதியது பூண்டபோது தகமையுள்ள வசரீரி வாக்குண்டாம்
மானேதான் சீஷவர்க்கம் மாண்பாகேளு மகிழ்ச்சியுடன் சமாதிதனிலிருக்கும்போது
தேனேதான் சிவயோக நிலையில்நின்று தேற்றமுடன் மேதினியில் வருவதற்கு
மானேதான் வதிசயங்கள் மிகநடக்கும் மகத்தான சமாதியிடம் பக்கல்நில்லே  

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4241 - 4245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4241. ஆச்சப்பா புலிப்பாணியின்னங்கேளு வப்பனே தேறையர் சென்றபோது
மூச்சடங்கி வெகுகாலஞ் சென்றசித்து மூதுலகைக் கடந்ததொரு சித்துமாச்சு
மாச்சலுடன் பூமிதனில் ஓராள்மட்டம் மண்ணதனை வாரியல்லோகண்டபோது
பாச்சலுடன் பூமிதனில் நிலங்களெல்லாம் பாதாளநீர்மட்டும் வுருகலாச்சே

விளக்கவுரை :


4242. உருகவே நீர்மட்டம் நிலங்களெல்லாம் வூருருகத்தான் பாய்ந்துமே வேர்கள்போல
பெருகவே சடைமுடியுந் தம்பிரான்போல் பேரான சமாதிதனிலிருந்தார்தாமும்
வருகலுடன் கண்மூடிசித்துதாமும் வண்மையுடன் சமாதிதனிலிருக்கக் கண்டார்
சருகலுடன் ரிஷியாரும் பூமிதன்னில் சட்டமுடன் தானிருக்கக் கண்டார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4243. பாரேதான் தேறையமுனிவர்தாமும் பண்மையுடன் சமாதிதனிலிருந்துகொண்டு
தீரமுடன் தேறையமுனிவர்தம்மை திறமுடனே யாரென்று கேட்கும்போது
சேரேதான் சித்துமுனி ரிஷியைப்பார்த்து சிறப்புடனே தாமுரைப்பார் முனிவர்தாமும்
நேரேதான் அகஸ்தியனார் சீஷரென்றார் நேர்மையுடன் தேறையமுனிவர்தானே

விளக்கவுரை :


4244. தானான தேறைய முனிவர்தானும் தகமையுடன் ரிஷியஅர்க்கு விடையுஞ்சொன்னார்
கோனான கும்பமுனி கடாட்சத்தாலே குவலயத்தில் வெகுகோடி மகிமைதன்னை
தேனான மனோன்மணியாள் அருளினாலே தேசமதில் அதிதமிகக்கண்டேன்யானும்
மோனான தேறையமுனிவர்தானும் மோதவே யடிபணிந்து துதித்திட்டாரே

விளக்கவுரை :


4245. துதித்தாரே தேறையமுனிவர்தானும் துப்புறவாய் அடிவணங்கி தெண்டனிட்டு
கதிப்புடனே காயகற்பங்கொண்டுயானும் காசினியில் வெகுகோடி காலந்தானும்
மதிப்புடனே சமாதிமுகம் சென்றுயானும் மகதேவர் தசவருஷம் யிருந்தேன்யானும்
விதிப்பயனாம் அமைப்பின்படி பின்னுமல்லோ வேதாந்தத் தாயினது வருள்பெற்றேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4236 - 4240 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4236. உண்மையாம் சொற்பனமும் கண்டேனப்பா ஓகோகோ நாதாக்களுக் குகந்தசீஷர்
வண்மையாம் சமாதிக்குப் போனாப்போலும் வடப்புடனே யிருபதுவாண்டிருப்பனென்றும்
கண்மையாம் மனோன்மணியாள் கடாட்சத்தாலே கண்டேனே சொற்பனங்கள் உண்மையாக
திண்மையாஞ் சமாதிக்குப் போனாற்போலும் திறமான வதிசயங்கள் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4237. பார்த்தேனே சமாதிக்குச் செல்லும்போது பாங்கான வெகுகாலஞ் சென்றசித்து
நேர்த்தியுடன் பூமிதனில் சமாதிபூண சேர்மையுடன் சீஷர்களுமொன்றாய்கூட்டி
பூர்த்தியுடன் குழிதோண்ட போனபோது புகழான சித்தொருவரங்கிருந்தாப்போலும்
பார்த்திடவே பிரகாசமான ஜோதி மகத்தான சித்தொருவர் கண்டேன்தானே 

விளக்கவுரை :

[ads-post]

4238. தானான சொற்பனங்கள் கண்டேனப்பா தண்மையுள்ள சீஷர்களே என்னசொல்வேன்
கோனான எனதையர் அகஸ்தியர்போல் கொற்றவனார் சித்தொருவர் கண்டேனங்கே
கோனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவுடனே கண்விழித்துப் பார்க்கும்போது
மானான சொற்பனத்தில் கண்டாப்போல மன்னவனே கண்விழிக்கி லொன்றுங்காணே

விளக்கவுரை :


4239. காணேனே சொற்பனத்தில் சித்துதாமும் கைலாசநாதருட ஜோதிப்போல்தான்
வூணவே நினைவதுதான் கினவுமாச்சோ பொங்குமுன் சொற்பனமும் மெய்யோபொய்யோ
தோணவே எந்தனுக்கு ஒன்றுங்காணேன் துரைராஜசுந்தரனே மகிமையேதோ
மாணவே மறுபடியுஞ்சித்துதாமும் மகத்தான சமாதிக்கு ஏகினாரே

விளக்கவுரை :


4240. ஏகினார் சீஷவர்க்க மனேகம்பேர்கள் எழிலான கூட்டமுடன் ஏகியல்லோ
சாகமுடன் நர்மதா மலைக்குமேற்கே சட்டமுடன் சமாதிக்கு சென்றுமல்லோ
வேகமுடன் சமாதியது தோண்டும்போது மேன்மையுள்ள சித்தொருவர் அங்கிருந்தார்
போகமுடன் சித்தொருவர் தன்னைக்கண்டார் யொளியான பிரகாசந்தோன்றலாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.