போகர் சப்தகாண்டம் 4306 - 4310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4306. பாரேதா னின்னமொரு மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் எனதையர் காலாங்கி நாதர் நேர்மையுடன் எந்தனுக்கு வுரைத்தநீதி
சீரேதான் குளிகைகொண்டு யடியேன்தானும் சிறப்புடனே அஷ்டதிசை சுத்தியல்லோ
வீரேதான் வடக்குமுகம் போகும்போது வீரான கடுவெளியைக் கண்டேன்தானே

விளக்கவுரை :


4307. கண்டேனே கானகத்தில் மார்க்கந்தன்னை கடுவெளியா மென்றதொரு சித்துகண்டேன்
அண்டியே யானுமல்லோ வருகிற்சென்றேன் அங்ஙனவே யாரென்று என்னைக்கேட்க
விண்டதொரு கடுவெளியாஞ் சித்தருக்கு விருப்பமுடன் காலாங்கி சீஷனென்றேன்
பண்டிதங்கள் மிகக்கேட்டு என்னையல்லோ பட்சமுடன் ஆசீர்மம் செய்தார்காணே

விளக்கவுரை :

[ads-post]

4308. காணவே கடுவெளியாஞ் சித்துதம்மை கனமுடனே யடியேனும் வணங்கியல்லோ
பூணவே காட்டகத்தைக் காணவந்தேன் புனிதமுள்ள ரிஷியாரே விண்ணப்பங்கேள்
தோணவே பவளமென்ற காட்டகத்தை தொல்லுலகில் யான்பார்க்கவேண்டுமென்றேன்
நீணவே யடியேனும் கேட்கும்போது நீதியுடன் எந்தனுக்கு வுரைத்தார்தாமே

விளக்கவுரை :


4309. உரைத்தாரே கடுவெளியாஞ் சித்தர்தாமும் ஓகோகோ யினாறோநாதனென்று
வரையான முறைப்படியே சித்துதாமும் வடகோடி கானகத்தைச் செல்லநன்னி
திரைபோன்ற காலுக்கு வடக்கேயப்பா தீவாந்திரமானதொரு காடொன்றுண்டு
கரையான வழிதனையே கண்டதில்லை காசினியில் அதிதமப்பா சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


4310. ஒண்ணாது யென்றல்லோ சித்துதாமும் ஓகோகோ நாதாக்களறியாக்காடு
குண்ணான மலையதுவும் கூறப்போமோ கூறான கதண்டுகளு மதிலேயுண்டு
என்னவே யாராலும் முடியாதப்பா எழிலான சிங்கத்தின் தலையைப்போல
அண்ணாந்து பார்த்தவரை யங்கேகொல்லும் அதவான வடகோடி மலைதானாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4301 - 4305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4301. வாழ்கவென்றால் லோகமதிலொன்றுமில்லை வையகத்தோர் வாழ்வெல்லா மிந்தவண்ணம்
மூழ்கியே போனார்கள் கோடிமன்னர் மூதுலகில் இருந்தவர்கள் யாருமில்லை
மாழ்கியே நன்னிலையில் நில்லாமற்றான் மதிகெட்டுப்போனவர்கள் கோடியுண்டு
பாழ்கியே லோகமதில் வாசைவிட்டேன் கைலாயமெந்தனுக்குக் காணியாச்சே

விளக்கவுரை :


4302. ஆச்சப்பா சீஷவர்க்கஞ் சொல்லக்கேளு வப்பனே சமாதிக்குச் சென்றபோது
மூச்சடங்கிப்போனதொரு தேகந்தானும் மூதுலகில் மறுபடியும் வந்துமென்ன
மாச்சலுடன் வையகத்தை யான்மறந்து வண்ணதனில் தேகமதையொழிப்பேனென்றும்
பாச்சலுடன் சமாதிக்குப்போறேனென்றும் பான்மையுடன் ரிஷியாரு மிரங்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

4303. இறங்கவே சீஷவர்க்கமெல்லோருந்தான் எழிலாகப் பாறைகொண்டு மூடினார்கள்
உறங்கவே மண்ணுதனில் ரிஷியார்தாமும் வத்தமனார் தேகமதை மேவலாக்கி
மறந்தாரே தேகமதை சொரூபர்தாமும் மானிலத்தில் விட்டொழித்து மண்ணில்சாய்ந்தார்
திறமுடனே சீஷரெல்லா மாசீர்வாதம் செப்பினார் துரைராஜ வேந்தருக்கே

விளக்கவுரை :


4304. வேந்தராம் புலிப்பாணி மைந்தாகேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் ரிஷியார்தம்மை
சாந்தமுடன் வுலகுதனில் யாரிருந்தார் சட்டமுடன் தேகத்தை மறந்தார்சித்தர்
போந்தமுடன் வுலகுதனில் யாருமில்லை பொன்னுலகம் பதிபோனார் மாண்பரெல்லாம்
நீத்தவே பொய்யான வாழ்க்கைநம்பி நீனிலத்தில் வெகுகோடி கெட்டார்தாமே    

விளக்கவுரை :


4305. கெட்டாரே மாண்பரெல்லாம் யுககோடிகாலம் கெவனமுடன் நாதாக்கள் தெய்வமென்பார்
பட்டாரே பாருலகில் மனிததெய்வம் பாரினிலே மனிதரே தெய்வமானால்
இட்டமொடு இன்னமொரு தெய்வமென்ன எழிலான பூலோக வாழ்க்கையாவும்
சட்டமுடன் இப்படியே இருக்குதல்லால் தாரிணியில் ஒன்றுந்தான் காணோம்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4296 - 4300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4296. தானான சொற்பனங்கள் அதிகங்காண்பார் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
பானான மிருகமெல்லாம் பாஷைபேசும் பட்சிகளும் பரிபாஷை மிகவும்கூறும்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாம் இருள்வந்து மூடிக்கொள்ளும்
பானான பரிதிமதி காணமாட்டார் பாலகனே சமாதியது வெடிக்கும்பாரே

விளக்கவுரை :


4297. வெடிக்குமே சமாதிதனி லசரீரியுண்டாம் வேகமுடன் சித்துவருங்காலமாச்சு
துடிக்கவே சீஷாதிவர்க்கமெல்லாம் துறையோடும் முறையோடும் சென்றாரங்கே
நடிக்கவே சித்தாதி சித்தரெல்லாம் நலமுடனே ரோமரிஷி வந்தாரங்கே
முடிக்கவே சீஷர்முகந் தன்னைநோக்கி முனையாக கேட்கலுற்றார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4298. தாமேதான் கேட்கையிலே சீஷர்தாமும் தண்மையுடன் தாமுரைப்பார் ரிஷியாருக்கு
போமேதான் சமாதிதனில் சென்றபோது பொங்கமுடன் தாமுரைத்த வர்க்கமெல்லாம்
வேமேதான் மேதினியில் செய்யலாச்சு விருப்பமுடன் மகிமையெல்லாம் நடக்கலாச்சு
ஆமேதான் தாமுரைத்த வர்க்கமெல்லாம் ஐயனே மெய்யாச்சி யென்றிட்டாரே   

விளக்கவுரை :


4299. என்றிட்ட போதையிலே ரிஷியார்தாமும் எழிலான தேகமதை நம்பொண்ணாது
சன்றிட்ட மாகவல்லோ சமாதிக்கேக சட்டமுடன் ரோமரிஷி முன்வரதானும்
வென்றிடவே சீஷர்களை மிகவிரும்பி விருப்பமுடன் சமாதிக்கு ஏகலாகி
சென்றிடவே பூலோக மாய்கையற்று சிறப்புடனே சமாதிக்கு யேகினாரே

விளக்கவுரை :


4300. ஏகவே ரோமரிஷி முனியார்தாமும் எழிலான சமாதிக்குச் செல்வேனென்று
சாகாமல் வையகத்தில் இருந்துமென்ன சட்டமுடன் காயகற்பம் கொண்டுமென்ன
வேகமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு விருப்பமுடன் வாசியோகஞ்செய்துமென்ன
யோகமது செய்துமல்லோ கோடிகாலம் ஒன்றையுந்தான் காண்பதில்லை தேகவாழ்வே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4291 - 4295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4291. தானான செந்தூர முண்டுமல்லோ தன்மையுடன் சமாதிக்குப்போகவென்று
கோனான குருசொன்ன வாக்குதம்மை குறையாமல் தன்மனதில்தான்நினைத்து
பானான சமாதிக்கு யிடமுந்தேடி பட்சமுடன் சீஷர்களைத் தானழைத்து 
மானான டில்லிக்கு மேற்கோரமப்பா மகத்தான சமாதிக்கு இடங்கண்டாரே 

விளக்கவுரை :


4292. கண்டாரே டில்லிக்கு மேற்கேயப்பா கனமான ரோமரிஷி முனிவர்தானும்
அண்டர்முனி யறியாத வனாந்திரத்தில் அங்ஙனவே சமாதிக்கு யிடமுங்கண்டு
தொண்டரெனுஞ் சீஷவர்க்கமானபேரை துரைராஜ சுந்தரனார் தாமழைத்து
விண்டிடவே சமாதியது தோண்டுதற்கு வருப்பமுடன் வுத்தாரஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4293. பாரேதான் சீஷவர்க்க மாண்பரோடு பாங்குடனே சமாதியதில் இறங்கவென்று
நேரேதான் சீஷர்முகந் தன்னைநோக்கி நேர்மையுடன் தாமுரைப்பார் ரிஷியார்தாமும்
கூரேதான் சமாதிக்குப் போரேனப்பா கொற்றவனே இருபதுவாண்டுமட்டும்
சீரேதான் வையகத்தை யான்மறந்து சிறப்புடனே இருப்பே னென்றுரைத்தார்தாமே

விளக்கவுரை :


4294. தாமான சமாதிக்குப் போகுமுன்னே தகமையுடன் ரிஷியாருந் தாமுரைப்பார்
சாமான மானதொரு சீஷர்தம்மை தன்மையுடன் பக்கலில்தாமழைத்து
கோமானாம் ராஜாதிராசர்தம்மால் கொற்றவனா யிடையூறு யெதுநேர்ந்தாலும்
நாமான சொற்படியே என்னைத்தானும் நலமான சமாதியது திறக்கொண்ணாதே

விளக்கவுரை :


4295. ஒண்ணாது சமாதிவிட்டு வருகும்போது வுத்தமனே சந்தனமும் மலரும்பாரு
நண்ணாது தேவதா புட்பந்தானும் நண்மையுடன் சமாதிசுத்திப் பூத்திருக்கும்
திண்ணமுடன் பாரிசாத புட்பமப்பா திடமான நாடெல்லாம் பூத்திருக்கும்
எண்ணமுடன் சித்தாதி சித்தரெல்லாம் எழிலான சொற்பனமும் காண்பார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.