போகர் சப்தகாண்டம் 4341 - 4345 of 7000 பாடல்கள்
4341. கண்டேனே நாதாக்கள் கண்டதில்லை காலாங்கி நாதருட கிருபையாலே
அண்டர்முனி ராட்சதருங்
கண்டதில்லை யவ்வனத்தே மாண்பர்களும் போனதில்லை
தொண்டுசெய்து யடியேனும்
வெகுகாலந்தான் தோற்றமுடன் தேசமெல்லாஞ் சுத்திவந்தேன்
விண்டவர்கள் யாரேனுங்
கண்டதில்லை வீரான கடுவெளியார் வனந்தானாமே
விளக்கவுரை :
4342. வனமான கடுவெளியார்
நாடுகண்டேன் வண்மையுள்ள சித்தொளிவைக் கண்டேன்யானும்
தினகரணுங் காணாத
வாசீர்மந்தான் திகழான கடுவெளியார் சித்துநாடு
கிண்ணிடனே மேகமது
தங்கும்நாடு புகழான திருப்பாலின் கடலோரந்தான்
மனமுடைய
சித்துமகாரிஷிகள்நாடு மகத்தான கடுவெளியார் சித்துநாடே
விளக்கவுரை :
[ads-post]
4343. நாடான கடுவெளியார்
சித்துநாடு நலமுடனே குளிகையது கொண்டுயானும்
காடான வாசீர்மந்
தன்னைக்கண்டேன் கடுவெளியார் வுபதேசம் யானும்பெற்றேன்
தாடாண்மையுள்ளதொரு
பலமுங்கொண்டேன் தாக்கான ரிஷியினுட பலத்தினாலே
கேடான கோடிவடகானகத்தில்
கொப்பெனவே யாசீர்மம் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4344. பார்த்தேனே பவளமென்ற
கடலோரத்தை பாங்குடனே யான்கண்டு வதிசயித்தேன்
தீர்த்தமுடன்
கானாறுகுகைதான்சென்று திரளான பவளமென்ற காட்டைக்காண
நேர்த்தியுடன் கடுவெளியார்
எந்தன்மீது நேர்மையுடன் அதிசயித்து சொன்னசொல்லை
பூர்த்தியாய் கடுவெளியார்
பட்சம்வைத்து புகழாக எந்தனுக்கு விடைசொன்னாரே
விளக்கவுரை :
4345. சொன்னாரே
எந்தனையுந்தானழைத்து சுத்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு
மன்னான காலாங்கிநாதர்தம்மை
மகத்தான சீடனிவன் போகரென்று
முன்னோர்கள் ரிஷிமுனிவர்
துதிக்கும்போகர் மூதுலகில் கீர்த்திபெற்ற சீஷனென்று
பன்னியே பலகாலும்
பட்சம்வைத்து பாங்குபெற வுத்தாரஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :