போகர் சப்தகாண்டம் 4381 - 4385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4381. கேட்கையிலே கடுவெளியார் சித்துதாமும் கெவனமுடன் பூர்விக்கியானத்தாலே
வேட்கமுடன் காலாங்கி சீடனல்லோ வெளிப்பட்டார் குளிகைகொண்டுசீனம்விட்டு
வாட்கமல வாவுத்தில் வீற்றிருக்கும் வண்மையுள்ள கடுவெளியார் சித்துமுன்னில்
ஆட்படைகளில்லாமல் ரிஷியார்தாமும் அவனிதனில் குளிகைகொண்டு இறங்கினாரே

விளக்கவுரை :


4382. இறங்கியே குளிகஐவிட்டு சித்துதாமும் எழிலான கடுவெளியார் முன்னேவந்து
திறமுடனே போகரிஷிமுனிவர்தாமும் தீர்க்கமுடன் கடுவெளியார்க் கஞ்சலித்து
அறமுடைய தானமது மிகவும்பூண்டு வன்புடனே கடுவெளியார் சித்தருக்கு
வுறமுடனே வணக்கமது மிகவும்பூண்டு வுத்தமனார் போகரிஷி பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4383. பணியவே கடுவௌஇயார் சித்தருக்கு பட்சமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
துணிவுடனே போகரிஷி முனிவர்தாமும் துப்புறவாய்க் கடுவெளியார் தம்மைக்காண
அணியான வாசீர்மந்தான் கொடுத்து வன்பஉடனே பக்கமது சேர்வைகொண்டு
பணியான கண்மணியே போகநாதா மண்டலத்தில் மங்களா வென்றிட்டாரே   

விளக்கவுரை :


4384. என்றிடவே  போகமுனி ரிஷியார்தாமும் எழிலான மங்களாகரமேயென்று
சென்றிடவே பவளமது அடியேன்பூண்டு சேனைபதி திரள்கூட்டஞ் சீனஞ்சென்றேன்
வென்றிடவே சீனபதி மார்க்கத்தார்க்கு விருப்பமுடன் பவளமென்ற காடுரைத்தேன்
இன்றுமுதல் தங்களது வாசீர்மத்தால் யெழிலான சீனபதி சுகமென்றாரே

விளக்கவுரை :


4385. என்றுமே போகரிஷி முனிவர்தாமும் எழிலான வதிசயங்கள் மிகவுங்கூறி
குன்றின் மேற்சந்திரனும் குவலயத்தில் குத்தெழுந்த பாலனைப்போல் கூறலாகி
அன்றுமே கடுவெளியார் சித்தருக்கு வன்புடனே வார்த்தையது மிகவுங்கூறி
இன்பமுடன் தாமிருந்தார் ரிஷியார்தாமும் எழிலான கடுவெளியார் துன்னேதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4376 - 4380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4376. கண்டாரே சீடர்களாங் கூட்டவர்க்கம் கனமான கடுவெளியார் சித்துதம்மை
அண்டாத சேனைமுடிமாண்பரெல்லாம் வன்பான சித்தொளிவைக் கண்டுமேதான்
தெண்டமுட னடிபணிந்து வஞ்சலித்து தெளிவான நாதவொளிசித்துதம்மை
பண்டுளப செங்கழுனி மாலைதன்னை பட்சமுடன் தான்போட்டு தொழுதிட்டாரே

விளக்கவுரை :


4377. இட்டாரே பதாம்புயத்தை பணிந்துமேதான் எழிலான சீஷவர்க்கக் கூட்டத்தோடு
கட்டுடனே யவர்முகத்தைத் தானும்பார்த்து களிப்புடனே யவர்பக்கல் நிற்கும்போது
சட்டமுடன் கடுவெளியார் சித்துதாமும் சாங்கமுடன் சீஷருக்கு உபதேசங்கள்
விட்டகுறை தப்பாமல் சீடருக்கு விருப்பமுடன் வுபதேசஞ்செய்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4378. செய்தாரே சீடருக்கு வுபதேசங்கள் செம்மலுடன் கடுவெளியார்சித்துதாமும்
வையவே சமாதிவிட்டு வெளியேவந்து பாங்குடனே வாசீர்மந் தன்னிற்சென்று
வெய்யவே கதண்டுமகாரிஷியார்தம்மை சிலதுகாலம் மேன்மையுடன் இருக்கவென்று வந்திட்டேனே

விளக்கவுரை :


4379. வந்தேனே யின்னமொரு யுகமிருந்து வளமையுடன் சமாதிக்குப் போவேனென்றும்
அந்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு வன்புடனே வாக்கதுவும் மிகவுங்கூறி
முந்தினதோர் காலாங்கி சீடர்தம்மை மூதுலக்லி காண்பதற்கு யெண்ணங்கொண்டு
சிந்தனையில் தானினைத்து சித்துதாமும் திட்டமுடன் போகர்தம்மை கேட்டிட்டாரே

விளக்கவுரை :


4380. கேட்டாரே சமாதிக்கு முன்னேயப்பா கிருபையுடன் சித்தொருவர் வந்தாரங்கே
நீட்டமுடன் காலாங்கி சீடரென்று நிலையான குளிகையது பூண்டுகொண்டு
வாட்டமுடன் என்றன்முன் வாட்பேசி வளமான பவளமென்ற மாலைபூண்டு
ஓட்டமுடன் சீனபதிபோனசித்து வுத்தமனே காணவென்று கேட்டிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4371 - 4375 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4371. பயமேது உலகுதனிலொன்றுமில்லை பாங்கான புலிபசுவும் ஒன்றாய்க்கூடி
நயமுடனே ஓர்த்துறையில் நீர்குடிக்கும் நண்பஅன சற்பமது கீரிதானும் 
செயமுடனே ஓர்கூண்டில் விளையாடும்பார் செப்பிடவே கெருடனுடன் பாம்புதானும்
தயம்பிடவே கூடிவிளையாடிருக்கும் தாரிணியில் அதிசயங்கள் காணும்பாரே  

விளக்கவுரை :


4372. பார்க்கையிலே குருடனவன் கண்திறப்பான் பாங்கான செவிடனுக்குக் சத்தங்கேட்கும்
தீர்க்கமுடன் ஊமையனும் வார்த்தைசொல்வான் திறமான சப்பாணி நடப்பான்பாரு
ஏற்கவே யித்தாதி மகிமையெல்லாம் எழிலாகத் தானடக்கும் வருங்காலத்தில்
ஆர்க்கவே போகருக்கு சொன்னவாக்கு அப்பனே வுலகுதனில் நடக்குந்தானே

விளக்கவுரை :

[ads-post]

4373. தானாக வதிசயங்கள் மிகநடக்கும் தாக்கான சமாதிவிட்டு வருகும்போது
பானான பாறையது வெடிக்கும்பாரு பளிங்கான ஜோதியென்ற சொரூபங்காணும்
தேனான வருஷமது முகுவதாகும் தேவிமனோன்மணியாள் கடாட்சத்தாலே
வேனான சமாதிவிட்டு வெளியில்யானும் விருப்பமுடன் வருவேனென்ற இயம்பினாரே

விளக்கவுரை :


4374. என்னவே கடுவெளியார் சித்துதாமும் எழிலான கெடுவதுவுஞ் சென்றுமேதான்
பன்னவே சித்துவருங் காலமாச்சு பாங்கான சீஷரெல்லாம் வந்திருந்தார்
முன்னமே தாமுரைத்த வாக்கதெல்லாம் மூதுலகில் நிறைவேற நாளுமாச்சு
சொன்னதொரு காலமது முடிவுமாச்சு சுந்தரனார் சமாதியது வெடிக்கலாச்சே

விளக்கவுரை :


4375. ஆச்சப்பா சமாதியது வெடிக்கலாச்சு ஆகாகா நாதாக்கள் ஒளிவுதானும்
பேச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் பேரான மண்ணுலகில் பிறவியாச்சு
மூச்சடங்கி வெகுகாலமிருந்தசித்து மூதுலகைக்காண்பதற்கு வந்தாரல்லோ
மாச்சலுடன் தேகமது தங்கம்போலாம் மகத்தான ரிஷியாரைக் கண்டிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4366 - 4370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4366. வாழ்கவென்றால் சமாதிக்கு சென்றபின்பு வையகத்தில் அதிசயங்கள் மிகநடக்கும்
தாழ்கவே சத்ருசங்காரரெல்லாம் தாழ்மையுடன் நீதிவழிநடப்பார்பாரு
மீழ்கவே மிருகமெல்லாம் பாஷைபேச மிக்கான பட்சியது வேதங்கூறும்
ஆழ்கவே கடலதுவும் திசைமாறிப்போம் வப்பனே வதிசயங்கள் மெத்தவுண்டே

விளக்கவுரை :


4367. உண்டான சத்துருக்கள் வணங்குவார்கள் ஓகோகோ நாதாக்களெல்லாங்கூடி
திண்டான சித்துவருங் காலமாச்சு திகழான சமாதிவிட்டு ஏகவென்று
அண்டமது கிடுகிடுக்க ரிஷிகளெல்லாம் வன்புடனே ஏவலுக்கு முன்னேநிற்பார்
வண்டினங்கள் கவிபாடுஞ் சமாதிமுன்னே வருங்கால மாச்சுதென்று நினைத்துயக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

4368. கொள்ளவே கெர்ப்பமது குள்ளிருக்கும் கூறான சிசுபாலன் வார்த்தைகூறும்
விள்ளவே பரிதிமதி திசைமாறிப்போம் வீரான கஆட்களுமதிரும்பாரு    
துள்ளவே ஆதிசேடன் பூமிதன்னில் துடிப்புடனே தோள்மாற்றி நடுங்கச்செய்வான்
அள்ளவே யண்டமது வதிரும்பாரு ஆகாய நட்சத்திரமும் அதிரும்பாரே

விளக்கவுரை :


4369. பாரேதான் சமாதியது சுழலும்பாரு பாங்கான சமாதிக்குள் அசரிருண்டாம்
நேரேதான் தெற்குமுகம் அதிசயங்கள் நெருப்பான தேன்மாரி மிகவேபெய்யும்
சேரேதான் மேற்குமுகந் தன்னிலப்பா சிறப்பான மண்மாரி மிகவேபெய்யும்
கூரேதான் சந்தனமும் மலரும்பாரு குறிப்பான செங்கழுநீர் பூர்க்குந்தானே

விளக்கவுரை :


4370. தானான பாரிஜாதம் மலரும்பாரு தாக்கான தேவதா புட்பந்தானும்
மானான மலைதனிலே பூர்க்கும்பாரு மகத்தான காடெல்லாம் மணமேவீசும்     
தேனான கதண்டுகளும் கூண்டைவிட்டு தேன்பொதிக்க காட்டகத்தைச் செல்லும்பாரு
கோனான அரசர்களுந் தேனையுண்ண குவலயத்தில் ஒருவருந்தான் பயப்படாரே 

விளக்கவுரை :


Powered by Blogger.