சிவவாக்கியம் 26 - 30 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

உற்பத்தி நிலை

26. அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

விளக்கவுரை :

அறிவு நிலை

27. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?

விளக்கவுரை :

[ads-post]

28. அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

விளக்கவுரை :

29. தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!

விளக்கவுரை :

30. தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 21 - 25 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

21. அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!

விளக்கவுரை :

22. அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!

விளக்கவுரை :

[ads-post]

23. நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!

விளக்கவுரை :

24. ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!

விளக்கவுரை :

கிரியை நிலை

25. வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 16 - 20 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

16. வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.

விளக்கவுரை :

17. அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.

விளக்கவுரை :

[ads-post]

18. அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?

விளக்கவுரை :

19. சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!

விளக்கவுரை :

20. சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 11 - 15 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

11. அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.

விளக்கவுரை :

12. கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.

விளக்கவுரை :

[ads-post]

13. நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
விளக்கவுரை :

யோக நிலை

14. சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!

விளக்கவுரை :

15. நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.

விளக்கவுரை :
Powered by Blogger.