சிவவாக்கியம் 136 - 140 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

136. தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?
ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?
தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!

விளக்கவுரை :

137. ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

138. தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?

விளக்கவுரை :

139. வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!

விளக்கவுரை :

140. சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 131 - 135 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

131. காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

விளக்கவுரை :

132. எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

விளக்கவுரை :

[ads-post]

133. அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;
முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?

விளக்கவுரை :

134. சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?  

விளக்கவுரை :

135. மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

விளக்கவுரை :



சிவவாக்கியம் 126 - 130 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

126. இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்,
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!

விளக்கவுரை :

127. ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின்
சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!

விளக்கவுரை :

[ads-post]

128. வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்தபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே!

விளக்கவுரை :

129. பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.

விளக்கவுரை :

130. சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 121 - 125 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

121. நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே!

விளக்கவுரை :

122. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.

விளக்கவுரை :

[ads-post]

123. விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.

விளக்கவுரை :

124. மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!

விளக்கவுரை :

125. மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே,
கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால்
என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே!

விளக்கவுரை :
Powered by Blogger.