சிவவாக்கியம் 201 - 205 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

201. உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது
இருக்கில்என், மறைக்கில்என் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?
திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

202. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே.

விளக்கவுரை :

[ads-post]

203. பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே.

விளக்கவுரை :

204. பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;
திட்டவும் படாதடா, சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

விளக்கவுரை :

205. அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 196 - 200 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam


196. முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்
திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.

விளக்கவுரை :

197. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.


198. மூலவட்டம் மீதிலே முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல்
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர்
ஓலைவட்ட மன்றுளே நவின்றஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

199. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே.

விளக்கவுரை :

200. பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம்
ஆவியோடி லிங்கமாய் அகண்டம்எங்கும் ஆகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 191 - 195 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

191. அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே!

விளக்கவுரை :

192. ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே?

விளக்கவுரை :

[ads-post]

193. பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?

விளக்கவுரை :

194. துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல்,
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே.

விளக்கவுரை :

195. வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே?

விளக்கவுரை :



சிவவாக்கியம் 186 - 190 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

186. நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய்
வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.

விளக்கவுரை :

187. மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்;
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்;
மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள்
பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

விளக்கவுரை :

[ads-post]

188. உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே.

விளக்கவுரை :

189. ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.

விளக்கவுரை :

190. ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.