சிவவாக்கியம் 216 - 220 of 525 பாடல்கள்
216.
ஆதியாகி அண்டரண்டம்
அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்,
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!
விளக்கவுரை :
217.
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா
ரணத்திலே
நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
218.
அஞ்சும்அஞ்சும்
அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
219.
அஞ்செழுத்தி னாதியாய்
அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.
விளக்கவுரை :
220.
உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு
தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.
விளக்கவுரை :