சிவவாக்கியம் 291 - 295 of 525 பாடல்கள்
291.
பொருந்துநீரும் உம்முளே
புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே?
விளக்கவுரை :
292.
அம்பரத்துள் ஆடுகின்ற
அஞ்செழுத்து நீயலோ?
சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
293.
ஈரொளிய திங்களே
இயங்கிநின்றது தற்பரம்
ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.
விளக்கவுரை :
294.
கொள்ளொணாது மெல்லொணாது
கோதாறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே?
விளக்கவுரை :
295.
வாக்கினால் மனத்தினால்
மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.
விளக்கவுரை :