சிவவாக்கியம் 376 - 380 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

376. வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

377. மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.

விளக்கவுரை :

[ads-post]

378. முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே
சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே
தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே.

விளக்கவுரை :

379. ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ?
நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ?
வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.

விளக்கவுரை :

380. உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 371 - 375 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

371. வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம்.

விளக்கவுரை :

372. அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.

விளக்கவுரை :

[ads-post]

373. உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.

விளக்கவுரை :

374. முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.

விளக்கவுரை :

375. மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த்
தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 366 - 370 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

366. அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே.

விளக்கவுரை :

367. ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே;
தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்
ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

368. ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

369. வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும்
பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

370. பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 361 - 365 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

361. உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.

விளக்கவுரை :

362. உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில்
சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.

விளக்கவுரை :

[ads-post]

363. செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

364. ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே
தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்
கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

365. பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே
பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.