சிவவாக்கியம் 346 - 350 of 525 பாடல்கள்
346.
ஆவிஆவி ஆவிஆவி
ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.
விளக்கவுரை :
347.
வித்திலே முளைத்தசோதி
வில்வளையின் மத்தியில்
முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
348.
மாலையோடு காலையும்
வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
விளக்கவுரை :
349.
மோனமான வீதியில்
முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
350.
உச்சிமத்தி வீதியில்
ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.
விளக்கவுரை :