சிவவாக்கியம் 516 - 520 of 525 பாடல்கள்
516.
நீரினில் குமிழிஒத்த
நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்.
விளக்கவுரை :
517.
காவியும் சடைமுடி
கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
518.
முத்திசேரச் சித்திஇங்கு
முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல்.
விளக்கவுரை :
519.
செம்மைசேர் மரத்திலே
சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.
விளக்கவுரை :
520.
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி
எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்;
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.
விளக்கவுரை :