பத்திரகிரியார் பாடல்கள் 206 - 210 of 231 பாடல்கள்

206. பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

207. மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

208. ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

209. தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

210. சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 201 - 205 of 231 பாடல்கள்

201. அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

202. நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

203. எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்?

விளக்கவுரை :

204. அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்?

விளக்கவுரை :

205. அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 196 - 200 of 231 பாடல்கள்

196. அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்?

விளக்கவுரை :

197. மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

198. பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

199. வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்?

விளக்கவுரை :

200. பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 191 - 195 of 231 பாடல்கள்

191. நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

192. அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்?

விளக்கவுரை :

193. நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

194. தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

195. நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.