பத்திரகிரியார் பாடல்கள் 201 - 205 of 231
பாடல்கள்
201. அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
202. நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது
எக்காலம்?
விளக்கவுரை :
203. எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
204. அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது
எக்காலம்?
விளக்கவுரை :
205. அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது
எக்காலம்?
விளக்கவுரை :