பத்திரகிரியார் பாடல்கள் 196 - 200 of 231 பாடல்கள்
196. அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
197. மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்?
விளக்கவுரை :
198. பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
199. வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது
எக்காலம்?
விளக்கவுரை :
200. பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது
எக்காலம்?
விளக்கவுரை :