பத்திரகிரியார் பாடல்கள் 191 - 195 of 231 பாடல்கள்
191. நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :
192. அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி
எக்காலம்?
விளக்கவுரை :
193. நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
194. தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
195. நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :