போகர் சப்தகாண்டம் 6976 - 6980 of 7000 பாடல்கள்
6976. தொழுதேனே ரோமரிஷி
சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
பழுதுபடா மச்சமுனி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர்
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர்
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
6977. பணிந்தேனே தன்வந்திரி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
அணியான ராமருக்குச்
சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
துணிந்துமே கௌபாலர்
தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ் சொன்னேன்
மணியான சுந்தரானந்தருக்கு
மகத்தான சரணங்கள் போற்றிதானே
விளக்கவுரை :
[ads-post]
6978. போற்றியே தேறையர்
சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
ஆற்றலுடன் பூதனாநந்தருக்கு
வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி
மாற்றலுடன் புண்ணாக்கு
ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தேற்றமுடன் இடைக்காடர்
சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே
விளக்கவுரை :
6979. தானான டமரகானந்தருக்கு
தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
கோனான தட்சணாநாயருக்கு
கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
பானான வகப்பேய் சித்தருக்கு
பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
மானான யாக்கோபு பாதம்போற்றி
மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே
விளக்கவுரை :
6980. கூறினேன் குறும்பரென்ற
சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
தேறியே யவர்பாதந்
தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
மாறுபடாசோதியென்ற
முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ஆறுநதி தீர்த்தமது
கொண்டுமல்லோ வவ்ர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே
விளக்கவுரை :