போகர் சப்தகாண்டம் 6976 - 6980 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6976. தொழுதேனே ரோமரிஷி சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
பழுதுபடா மச்சமுனி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே

விளக்கவுரை :


6977. பணிந்தேனே தன்வந்திரி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
அணியான ராமருக்குச் சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
துணிந்துமே கௌபாலர் தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ் சொன்னேன்
மணியான சுந்தரானந்தருக்கு மகத்தான சரணங்கள் போற்றிதானே

விளக்கவுரை :

[ads-post]

6978. போற்றியே தேறையர் சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
ஆற்றலுடன் பூதனாநந்தருக்கு வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி   
மாற்றலுடன் புண்ணாக்கு ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தேற்றமுடன் இடைக்காடர் சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே

விளக்கவுரை :


6979. தானான டமரகானந்தருக்கு தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
கோனான தட்சணாநாயருக்கு கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
பானான வகப்பேய் சித்தருக்கு பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
மானான யாக்கோபு பாதம்போற்றி மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே

விளக்கவுரை :


6980. கூறினேன் குறும்பரென்ற சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
தேறியே யவர்பாதந் தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
மாறுபடாசோதியென்ற முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ஆறுநதி தீர்த்தமது கொண்டுமல்லோ வவ்ர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 6971 - 6975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6971. தானான புலிப்பாணி தகமையோனே தாக்கான என்தேவர் சொன்னநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
பானான பாரிலுள்ளோர் புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே

விளக்கவுரை :


6972. செல்கவென்றால் எந்தன்முறை பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து
புல்கவே வையகத்தைத் தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று  
வில்கவே கலியுகத்தில் இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது நெடுநாளு மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே

விளக்கவுரை :

[ads-post]

6973. மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
எண்ணமது கலியுகத்து மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
கண்ணவிந்த மாண்பரப்பா கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே

விளக்கவுரை :


6974. நன்றான காசினியை மறந்துமல்லோ நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
குன்றான கலியுகத்தில் நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று
என்றைக்கும் வையகத்தின் வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
தென்றிசையில் கும்பமுனி சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே

விளக்கவுரை :


6975. தானான வகஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
கோனான வரரிஷியார் தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றி போற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 6966 - 6970 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6966. பாவமாம் நூலதனைப் பதனம்பண்ணு பாலகனே சமாதிமுகம் வைத்துப்போற்று
ஆவலுடன் விதியாளி வந்துகேட்டால் வப்பனே நீகொடுத்து மதிகள்கூறு
சாவதுவும் தலைமேலே இருக்குமப்பா சாங்கமுடன் நூல்கொடுத்தால் மெத்தநன்று
போவதுமெய் இருப்பதுபொய் என்றவாக்கியம் பொங்கமுடன் வேதமது நுணுக்கமாமே

விளக்கவுரை :


6967. வேதங்கள் நுணுக்கறிந்து யீயாவிட்டால் வெகுபாவம் வெகுசாபம் நரகமெய்தும்
நீதமுடன் பரிசுத்தவாளருக்கு நீதியுடன் கொடுப்பதுவே கர்மமாகும்
தோதமுடன் விதியாளி வந்துகேட்டால் தோறாமல் சமாதிமுகம் இருந்தநூலை
ஆதவமாம் அருளினது விசுவாசத்தால் வப்பனே நூல்கொடுத்து மதிகள்கூறே

விளக்கவுரை :

[ads-post]

6968. கூறவென்றால் புலிப்பாணி குணமுள்ளானே கொற்றவனே கலியுகமும் பிறந்துபோச்சு
மாறலுடன் வையகத்தில் வெகுபாடப்பா மாண்பர்களும் வெகுகேடு படுவாரப்பா
சீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிதமார்க்கம்
மீறவே தானடக்குங் கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்துகொள்ளே

விளக்கவுரை :


6969. கொள்ளப்பா யொருவரையும் நம்பவேண்டாம் கொற்றவனே கலியுகத்தில் அனியாயங்கள்
தள்ளவே போகாது தரணிமீதில் சட்டமுடன் அனேகவித தெய்வமென்பார்
விள்ளவே விசுவாசம் பாவமுண்டு வித்தகனே யனேகவித சாத்திரங்கள்
உள்ளபடி கூறுவார் மாந்தரப்பா வுத்தமனே மயங்காதே புத்திவானே 

விளக்கவுரை :


6970. புத்தியாய் கலியுகத்தில் சிலதுகாலம் புகழுடனே தாமிருந்து சமாதிகொள்வாய்
சத்தியத்தைத் தவறாதே தம்பிரானே சதகோடி சூரியன்போல் ஞானங்கொள்ளு
வித்தகனே விற்பனனே விண்ணுள்ளானே விட்டகுறைநேருமட்டும் வையகத்தில்
புத்தியாய் நெடுங்காலந்தாமிருந்து புண்ணியனே சமாதிமுகம் புரிவீர்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 6961 - 6965 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6961. சங்கையில்லா பெருநூலை பார்த்தபேர்கள் சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூலைப் பார்க்காமாண்பர் எழிலான சாலோக சாபமீந்தான்
அங்கமுடன் சாரூப பதவிமூன்றும் வப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகந்தன்னை புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே

விளக்கவுரை :


6962. தானான இன்னமொரு தண்மைசொல்வேன் தாக்கான புலிப்பாணி தயவுள்ளானே
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான பார்லோக மிடங்கொள்ளாது பாலகனே சொல்வதற்கு நாளுமில்லை
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கோடிமுறை சொல்வேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6963. பாரேதான் கலியுகம் பிறக்கலாச்சு பாலகனே சத்தியமும் விழலாய்ப்போச்சு
ஆரேதான் உனக்கு மதிசொல்வார் அப்பனே யுபதேசம் பெற்றமட்டும்
பேரிருக்க வூரிருக்க பிதாவிருக்க பேரான மகுத்துவத்தை வெளியிடாதே
சீரழிந்த மாண்பரெல்லாஞ் ஜெனிப்பாரப்பா ஜெகதலத்தில் கருமியென்ற கோடிபேரே

விளக்கவுரை :


6964. கோடியாம் நல்லவர்போ லிருப்பாரப்பா கொற்றவனே யுந்தனுக்கு யுபதேசித்த
தேடியதோர் பொருளப்பா சத்தகாண்டம் தெளிவான யேழாயிரங் காவியத்தை
பாடியே யுந்தனுக்கு தத்தமாக பட்சமுடன் யான்கொடுத்த பெருநூலப்பா
வாடியே மயங்காதே மனம்விடாதே மதிகெட்டு நில்லாதே நூல்கெடாதே

விளக்கவுரை :


6965. கொடுத்தாலும் விதியாளி பார்த்தறிந்து கொற்றவனே கொடுத்தாலும் புண்ணியமெய்தும்
கெடுத்ததொரு குடிகெடுக்கும் பாவிகட்கும் கெடியான சண்டாள மாண்பருக்கும்
அடுத்துறவு நயம்பேசி புரணிகூறும் வனியாயக்காரருக்கும் வறிவிலார்க்கும்
தொடுத்ததொரு பெருநூலாஞ் சத்தகாண்டம் துப்புரவாய்க் கொடுத்தாலே பாவமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.