பத்திரகிரியார் பாடல்கள் 11 - 15 of 231 பாடல்கள்


பத்திரகிரியார் பாடல்கள் 11 - 15 of 231 பாடல்கள்

11. வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

விளக்கவுரை :

12. ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

13. தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்?

விளக்கவுரை :

14. மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?

விளக்கவுரை :

15. பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார், பத்திரகிரியார் பாடல்கள், pattrakiriyar, pattrakiriyar paadalkal, siththarkal