பத்திரகிரியார் பாடல்கள் 6 - 10 of 231 பாடல்கள்
6. காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
7. சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது
எக்காலம்?
விளக்கவுரை :
8. பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
9. கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து
இருப்பது எக்காலம்?
விளக்கவுரை :
10. பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது
எக்காலம்?
விளக்கவுரை :