பத்திரகிரியார் பாடல்கள் 1 - 5 of 231 பாடல்கள்
காப்பு
முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல்
சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெருவது
எக்காலம்?
விளக்கவுரை :
நூல்
1. ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது
எக்காலம்?
விளக்கவுரை :
2. நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
3. தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
4. ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
5. மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது
எக்காலம்?
விளக்கவுரை :