பத்திரகிரியார் பாடல்கள் 66 - 70 of 231 பாடல்கள்


பத்திரகிரியார் பாடல்கள் 66 - 70 of 231 பாடல்கள்

66. ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

67. மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

68. அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

69. மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

70. வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார், பத்திரகிரியார் பாடல்கள், pattrakiriyar, pattrakiriyar paadalkal, siththarkal