பத்திரகிரியார் பாடல்கள் 61 - 65 of 231
பாடல்கள்
61. ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்?
விளக்கவுரை :
62. நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம்
பெருக்கெடுப்பது எக்காலம்?
விளக்கவுரை :
63. அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
64. கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?
விளக்கவுரை :
65. தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது
எக்காலம்?
விளக்கவுரை :