போகர் சப்தகாண்டம் 136 - 140 of 7000 பாடல்கள்
136. மேலானவிந்துவின்மேல்
நாதமொன்று மிக்கவதின்மேல்சத்தி யொன்றுகேளு
மாலானவிதின்மேலே
சிவன்தானொன்று உற்றசிவனாரென்னில் வாராட்டியந்தான்
பாலான வதின்மேலே பரைதானொன்று
பாருமந்தயெட்டல்லோ புரியஷ்டந்தான்
மாலானவிதினெட்டால்
பிறப்பிறப்புமாச்சு வாரான புரியஷ்டமார்க்கந்தானே
விளக்கவுரை :
137. மார்க்கந்தான் புரியஷ்டங்
கூத்தேகூத்து கோடிஜென்மமெடுத்து ஆடும்
ஏர்க்கவே
புரியஷ்டத்தெழுவகைதோற்றம் எங்குமதுவிரிந்தாடப் பிரபஞ்சமாச்சு
பார்க்கத்தான் புரியஷ்ட
பகவான்கூத்து பண்பாகவிதையறிந்து கூர்ந்துபாரு
தீர்க்கந்தான் பார்த்தறிந்த
பெரியோர்தாமும் திறந்தோமே தன்னியதில் மேல்நிற்பாரே
விளக்கவுரை :
[ads-post]
138. நிற்பார்கள் பரைமேலே
முப்பாழ்கேளு நீங்கியே கடுவெளிப்பாழாம துக்குள்ளே
ஒப்பார்க யொளிபாழாம்
நிற்கும்பாரு உமாந்துமேலதைத்தாண்டி யுரைக்கக்கேளு
விப்பான வெளியொளிப்பாழ்
விரைந்துபாரு மிதுமூன்றுவரை தாண்டவன் மனத்தாய்நிற்பாள்
கர்ப்பான மொழியுடையாள்
தமரின்வாசல் தனிப்பரந்தான் போதமது வொன்றாம்பாரே
விளக்கவுரை :
139. போதமது தானென்று மதற்கேபாரு
பேரானவகண்டமென்ற விளக்கேபேரு
மேதமென்ற தவன்
கடுக்கவ்வனவேப் பாதம்சேர்ந்ததுகில் தமக்குள்ளே சேரலாகும்
ஆகமதுகண்டவர் கண்டவீதி
ஆதியில்லை அந்தமில்லை யறியப்பாகும்
சேதமது போதமது மௌனமாகும்
சேசரித மனக்கரலா சேரொட்டாதே
விளக்கவுரை :
மறுபிறவியில்லாமல்
140. சேராதுயென்று சொல்லி
சிவயோகிதானும் நிலைத்து உன்னிப்பரையளவு யோடினாலுங்
கானானபிரவிவந்து
யெய்தும்யெய்தும் கருவில் பிறந்தாலும் சிவயோகியாவான்
பாரான பிரையளவும்
புரியஷ்டமாச்சு பண்பானவரைகடந்து வெளிப்பாழுற்றால்
ஆறான வெளிப்பாழை அண்டமென்று
அர்ச்சித்துப் பார்த்தாக்கால் பிறவியொட்டாதே
விளக்கவுரை :