போகர் சப்தகாண்டம் 131 - 135 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 131 - 135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
131. எட்டாதக் கருமண்டல மூட்டிக்கவிழ்ந்து இதமாகக் கைகண்டயோகங்காணும் 
கட்டாகக் கபாலத்தைக்கடந்து மெய்யென்று கதிர்போலே பகையோடி துவாதசாந்தத்தை
உட்டாக உண்டிருந்து அச்சபைதான்மறித்து உயரமாமுகடேத்த கபாலங்கல்லாம்
இட்டாத கருங்கனலே மிகவுமுண்டு எல்லாந்தான் தெரிசனமே யேறுங்காணே

விளக்கவுரை :


132. ஏறுமேலென்றீர்கண் மூக்கலேதாச்சு ஏறியேவாசிகொண்டு மனந்தோடுணு
ஊறுமங்கென்றுன்னினாலுகும்பாழில் ஒளியோடு பூரணந்தான் கோடிபானு
தேறிதீபச்சுடரில் திக்கெல்லாங்காணும் தெவிட்டாதமாலையாகி சிறக்கும்நாலுவீறு
யுரைத்திடு யோகத்தாலேமூட்டி உருக்கடந்த பொருள்தானும் மூலமாமே

விளக்கவுரை :

[ads-post]

133. மூலந்தானாலான பதவெளியுமாச்சுபாரு நலமானவானந்தான் போகமாச்சே
பானந்தான்பாரு மதிநல்லூராகும் பாவுமுப்பாழ்கடந்துமே பாருந் தீயைத்தானந்தா
பார்த்திடவே பரமவெளியாச்சு சாதித்து ஏரிடவே வெறும்பொய்யாச்சு
தேனந்தான் தோத்தரித்து சுருதிமனோன்மணியோ சுக்குற்றபூரணத்தை கண்டிட்டேனே

விளக்கவுரை :


புரியஷ்டம்

134. கண்டிட்ட சழிமுனையில் மன்னமோட்டி கண்மூடிவிழிரெண்டும் நினைவில்நோக்க
பண்டிட்ட நினைகாரம் பளிச்சென்று தோனும் பராபரமாமணித்தாயும் பரியொன்றீய்ந்தாள்
அண்டிடு ஏறுனால் அகண்டவெளிகாட்டும் ஆண்மையாம் போதத்தி லடுத்திவிக்கும்
குண்டிட்டு பரத்தினடி தன்னிற்காட்டுஞ் சுருதி மனோன்மணித்தாயும் வாவென்பாளே

விளக்கவுரை :


135. வாவென்ற சடமெல்லாம் பிரமன்கூறு மறைந்துநின்ற சத்தான மாலின்கூறு
போவெனற திதற்குள்ளே புரியஷ்டந்தான் பேரானசூட்சமென்ற தேகங்கேளு
சேவென்ற நரசிரமாம் சிவன்தானொன்று சேர்ந்ததின் மேலாதாரம் மஹேஸ்பரந்தானொன்று
தாவென்ற யகாரமாம் சதாசிவன்தானென்று சாந்துநின்ற விந்துவதின் மேலுமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar