போகர் சப்தகாண்டம் 126 - 130 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 126 - 130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
126. தாமென்ற தந்தைதாயை பூசிப்போர்கள் தமையடைந்த பேர்களையே தற்காப்போர்கள்
ஏமென்ற எல்லாவுயிருந் தம்முயிர்போலெண்ணி யிறங்குவோர் வரம்புதப்பி யிகழ்ந்திடாதார்
வாமென்ற வாசியுடன் வாதித்தாடு மகத்தோர்கள் வாமத்தின் வழியில்நிற்பார்
ஆமென்ற அப்புனிடம் வுப்புபோல வடைந்தோர்க்கு மடங்கலும் போதிக்கலாமே

விளக்கவுரை :


127. போதித்து போகத்தின்பொருளைகாட்டி பேரானஞானத்தின் பொருளைசொல்லு
ஆசித்துவமர்ந்தாக்கா லதில்பிழைப்பான் அல்லாவிட்டால் பேய்வனதிஷ்டயீனன்
சோதித்து நால்வகைக்கும் கர்ப்பஞ்சூட்டி துடியான வாதத்தின் சூட்சஞ்சொல்லு
காதித்து கைகாட்டு அருளொடுபொருளும் கைம்முறையாய் குளிகையொன்று சூட்டிநீட்டே

விளக்கவுரை :

[ads-post]

128. நீட்டுகின்ற லச்சையது நிரந்தரமுங்காட்டு நீங்காதபூரணத்தை படுத்துப்பாரு
நாட்டுகின்ற யெட்டுகா லதனில்சேர்ந்து கடித்துமே கண்டத்தை நின்றுகூடி
ஆட்டுகின்ற ஆடிச்சநிறைந்தரத்திலிருக்க ஆனவழியாங்கதிரேது முனைமூக்கில்நின்று
ஊட்டுகின்ற யோகிக்குத் தன்னிடத்தேயோடு முதிக்கின்ற ஞானத்துக்கதுபதமே

விளக்கவுரை :


129. பதமான லோகத்தாரீந்தமுறைகேளு மதியான அம்புவியில் முழங்குஞ்சீவன்
நிதமான நித்திரையில் கெடுவீதியோடல் நிறைந்தசையோகங் கொட்டாவியேக்கத்தால்
இதமான முப்பத்துயறுபத்துமாயாடும் இயலானபுரியஷ்ட மொவ்வொன்றாக
நலமாக நாளுக்குநாள் சீரணிக்கநாடியே சமன்பதிக்கு யெய்துவாரே

விளக்கவுரை :


130. காடுமிரந்தோடியே நமதுக்கெய்வார் நலமானவாசிநிறைந் துள்ளேவாங்கில்
ஆடுதிருகடனமும் அம்பலமும் காணும் ஆட்டத்தின் குறிப்புதான் மேலோகீழோ
நாடுமூலதாரஞ் சபைநந்தோமென்றே நாட்டியே தலமாறு முருகிச்சுழியோடேபூட்டு
கபாலம்புகுந்து குருபதத்தில்மேவிபுகுந்த மண்டலத்திதழ்தான் ஆயிரத்தினெட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar