போகர் சப்தகாண்டம் 56 - 60 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
56. தூங்கவே எழுப்பிமெல்ல பெண்ணைசேர்க்கும் சுகமஞ்சுஞ்சிவன்கைக்குள் தொழில்தானப்பா
ஓங்கவே ரத்தினசிம்மாசனமுமாகும் உமாசத்தியாகுமடா அஸ்திமாலை
மாங்கவே மான்மழுவும் வரிப்புலித்தோல் மகரகொடி சூரியப்பிரகாசமாகும்
தாங்கவே தேவதேவா சர்ப்பாசனம்தரித்த தாயார்தாமே

விளக்கவுரை :


57. தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று
ஓமென்று உன்னியே உத்தமிதாய்பதத்தை உறுதியாய் மனந்தன்னை ஓங்கப்பண்ணி
ஆமென்று ஐம்புலனை பறிவாய்தள்ளி ஆதிஅந்தமில்லா தாயே என்று
காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாகமனந்தன்னை ஒளியில்வையே

விளக்கவுரை :

[ads-post]

58. ஒளியான நந்திவாகனமுமாகும் ஒருசாமவேதத்தி னுருப்புமாகும்
கனியான காமப்பால் மாச்சல்செய்து கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி
வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாய் ஞானமெல்லாம் விழலாய்ப்பண்ணும்
கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடேகூர்ந்திடாயே  

விளக்கவுரை :


59. கூர்ந்திட்டாடு வளையில் காந்திதானும் கூகைக்குமாக்காலம் குறிகண்டாப்போல
ஆர்த்திட்டு அவர்பதத்தில் மனவிலங்குமாட்டி அறிவோடே அசையாமல் அடற்குள்நின்று
ஏர்ந்திட்ட ஏறுதற்கு வழியைக்கேட்டு எட்டெட்டு சித்திக்கும் இயல்புவாங்கி
வார்த்திட்டு வாதத்தின் இனங்களெல்லாம் கேட்டு வகையான காயசித்தி மார்க்கங்கேளே

விளக்கவுரை :


60. கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து
தேளுமே சிவனோடு சத்திக்குந்தான்சிதையாமல் மனந்தன்னை திருவடிசேவித்து
வாழுமே மந்திரத்தையுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி
மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடைதானே சுருக்காயேறே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 51 - 55 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
51. வீடாகதிரோதகையு மிருந்தவீடு வெகுபோகங்காமியத்தைவிடுத்தவீடே
வாசாமனங்கலங்கி நின்றவீடு மாயமெல்லாங்குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக்கருத்தழிந்து பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே

விளக்கவுரை :


52. தாக்கியே சந்திரமண்டலத்தில் பூவை சகஸ்திரமாமிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபலதூபந்தானும் பண்பாக மனத்தாலே பாவகமேபண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப் பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

53. செய்யவே மாலொடுலட்சுமிதானும் சித்தமகிழ்ந்தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு பலனுஞ்சொல்வார் பலபலவாந்தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல் சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக்குண்மை சொல்வார்
ஐயவே அஷ்டாங்கமனைத்தும் பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே

விளக்கவுரை :


அநாகதம்

54. அறிவுக்கு மேலேறி யெட்டங்குலத்துக்கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோணமாருதற்கு முதிர்வளையம் பனிரெண்டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்குயிதமில் நிற்கும் அட்சரந்தான் ஏற்றமாஞ்சழித்திய துக்கிருப்புமாமே

விளக்கவுரை :


55. ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமதுதேயுதானாகும்
தேனென்ன செம்மைநிறச் சிவப்புமாகும் தேய்வுடபீசமது றவ்வுமாகும்  
ஓமென்ற வொளிகோடி பானுவாரும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 46 - 50 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
46. உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே

விளக்கவுரை :


47. என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமேகம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர்கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே

விளக்கவுரை :

[ads-post]

48. மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்றபிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல் பத்திதழ்தான் பத்தில் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காதநரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுடமங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென்றறியலாமே

விளக்கவுரை :


மணிபூரகம்

49. அறிந்தமணி பூரத்தின்வீடுமாகும் அப்பனே துரியமதுயிருப்பிடந்தான் 
பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்குசக்கரமும் கருடவாகனமே

விளக்கவுரை :


50. வாகனமாய் லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமாயரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாய்தான் திரோதமையுமயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 41 - 45 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
41. தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்தவெள்ளம் திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே

விளக்கவுரை :


42. மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்தமயமுமாகி
பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய் திடாகரித்து நாதாந்தபெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந்தத்தில் புக்கிசுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே

விளக்கவுரை :

[ads-post]

43. துதிசெய்து மூலதனந்தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்டக வளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான் நடுபீசம்லங்னம் ஆமே

விளக்கவுரை :


44. சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற துரியாதிக்கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடையநிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே

விளக்கவுரை :


45. அஞ்சான பொன்னிற பிரமன்பக்க கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகமுப்பை அவர்தம்தண்டுகமண்டலமும் அட்சதமாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை பகர்ந்தநவரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்து உண்ணே

விளக்கவுரை :


Powered by Blogger.