போகர் சப்தகாண்டம் 41 - 45 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 41 - 45 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
41. தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்தவெள்ளம் திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே

விளக்கவுரை :


42. மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்தமயமுமாகி
பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய் திடாகரித்து நாதாந்தபெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந்தத்தில் புக்கிசுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே

விளக்கவுரை :

[ads-post]

43. துதிசெய்து மூலதனந்தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்டக வளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான் நடுபீசம்லங்னம் ஆமே

விளக்கவுரை :


44. சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற துரியாதிக்கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடையநிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே

விளக்கவுரை :


45. அஞ்சான பொன்னிற பிரமன்பக்க கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகமுப்பை அவர்தம்தண்டுகமண்டலமும் அட்சதமாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை பகர்ந்தநவரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்து உண்ணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar