போகர் சப்தகாண்டம் 46 - 50 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 46 - 50 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
46. உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே

விளக்கவுரை :


47. என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமேகம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர்கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே

விளக்கவுரை :

[ads-post]

48. மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்றபிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல் பத்திதழ்தான் பத்தில் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காதநரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுடமங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென்றறியலாமே

விளக்கவுரை :


மணிபூரகம்

49. அறிந்தமணி பூரத்தின்வீடுமாகும் அப்பனே துரியமதுயிருப்பிடந்தான் 
பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்குசக்கரமும் கருடவாகனமே

விளக்கவுரை :


50. வாகனமாய் லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமாயரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாய்தான் திரோதமையுமயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar