போகர் சப்தகாண்டம் 36 - 40 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 36 - 40 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
36. நாடாமற் போவதென்ன என்றுகேட்க நற்சத்த பரிசமொடுரூபம் ரசகெந்தி  
தாடாமல் சத்தோடு பொறிகளாஞ்சாந் தனக்கேற்ற வழிப்போக்கில் மனந்தானோடும்
வாடாமல் சாரத்தோடு காரம்போல் தனக்கான தண்மயமான பரிபாஷை
தேடாமல் காதையைநீ போற்றினாக்கால் சொல்லொன்று கேளாது சூட்டிப்பாரே

விளக்கவுரை :


37. சூட்டிப்பார் இன்னமும்நீ பரிட்சைகேளு துடித்தன்னை போற்றிடிலோ ரூபங்காணார்
ஊட்டிப்பார் அமுதந்தன்னை அசைத்துக்கொண்டால் வளமானவாசமொன்றும் தோன்றிடாது
ஊட்டிப்பார் வாய்தன்னில் உப்பையிட்டால் உருக்கறிச்சு உப்பென்ற ருசியேகாணும்
ஓட்டிப்பார் என்பது மூடலிலூர்ந்தாலேற்றமாம் அறிவாலே பரிசமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

38. ஆச்சிசிந்தனை வேரால் நின்றாயானால் அரிருமாகா மந்திரியின் வேகமாச்சு
ஓச்சிந்து மனத்துணித்தம் பிராணயாமம் உகந்தேறி வாசியைநீ பிடித்தேபூரி
முச்சிந்த மூலத்தில் முதிர்ந்துகும்மி முனையான வயமுமாச்சு விவரிடாமல்
காச்சிந்த மூலத்தில் நின்றுநின்று கதறக்கண்டு தெரியும் மேலேயேறே

விளக்கவுரை :


39. ஏறியே பாரென்று ஐயர்சொன்னார் எனையீன்ற ஆயர்காளாங்கிநாதர்
பாருஇது வழியென்று பக்குவத்திச்சொன்னார் பதஞ்சலியும் வியாக்கிரமர் சிவயோகமும்
மீறியோ அதற்குவிளக்கஞ்சொன்னார் மிக்கபராபரித்தாயும் இதுவேசொன்னாள்
ஆரியோ தான்பார்த்து ஆறுவத்தை அநுபவித்து ஏழாயிரத்தில் அமைத்திட்டேனே

விளக்கவுரை :


40. அமைத்திட்ட சிகாரமென்ற அட்சரத்தா மழும்பாகான்வெளியில்லாகனமே செய்வார்
வெளிதன்னில் கூகூகூகூ நமைத்திட்டொரு சொல்லால் ஏழுகோடி
காகமெனும்விரவியென்ற கடலில் வீழ்வார் சிமைத்திட்ட
சித்தமெல்லாம் மூலத்துள்ளே சிக்கென்று உன்னியே தியானிப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar