போகர் சப்தகாண்டம் 76 - 80 of 7000 பாடல்கள்
76. பார்க்கவே உகாரமா
நடுமையத்தில் பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகராத நிர்மலன்
தன்வடிவாம் பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள்வைத்து
நேர்க்கவே ஓடாமல்
நிறுத்திப்பாரு நிலையாத பிரவியரும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ
வேதாந்தத்தின் ஆதிபொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே
விளக்கவுரை :
77. அறியொணா பிரமாந்திரம்
என்றுபேரு அதிலுடைய நிறந்தானும் படிகவர்ணம்
நெறியொண்ணா காயத்ரியாகலின்னா
நித்யநித்ய நிருபமாகும் நித்யசுத்த
பறியெண்ணாம் பரிபூரண
சச்சிதானந்த பகாரிய நிரஞ்சன வித்துவங்கே
நெறியொண்ணா நிற்பாகா
யதிமசியாம் மெறிவதனுசூட தம்பிரசோதயாதே
விளக்கவுரை :
[ads-post]
ஆராதார தெரிசனம் காயத்திரி
78. தேயென்ற யிருபத்தி
நாலாய்நின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து
வாவென்று வாசியைநீ
இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல்
தேயென்று இருத்தியே
கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க
பூவென்ற பிறவியற்ற
பூரணத்தில் லயிப்பாய் போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே
விளக்கவுரை :
79. பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாய் பிரித்துப்பாரு
அருளான உன்மனையில்
எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று
தெருளான பதினொன்றுஞ்
செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன்
நருளான நந்தியேழாயிரத்தில்
நாட்டினார் நல்லநீவை நான்காணேனே
விளக்கவுரை :
80. காணாத மார்க்கமெல்லாம்
காணும்நேராய் கடுசாகமுனைமுகத்தில் கடிந்தால்சாறும்
வாணாதே யூணினால்
பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும்
கோனாக குண்டலிகோத்தை
நோக்கிக்கூர்ந்து பார்ப்பதினொன்று மொன்றுகாணும்
நானாதோடு
மையம்நோக்கினாக்கால் நலமானகாலாந்தான் கோடிப்பானே
விளக்கவுரை :