போகர் சப்தகாண்டம் 121 - 125 of 7000 பாடல்கள்
121. உண்மையாய்ப் பவியாது
யோகந்தானும் உறதியாம்பலவான நீசருக்கு
பண்மையாம் பாவமென
கோபிக்குந்தான் பலியாது கொலைசெய்த பாவிக்கேற்கே
வண்மையாம் மத்திபமாம்
புத்தியானோன் மருவான காமோகி மகத்தன்மூடன்
எண்மையாய் தாட்சிகளும்
ஏற்றம்பொய்யோன் இடும்பனாம் அனியனொடு சோம்பர் தானே
விளக்கவுரை :
122. தானான
பெண்ணைப்பார்த்தேங்கிப் பின்செல்வோன் தாக்கான கர்ம்மவரை தப்புமாபாவி
தானான சோகவிகாரந்தான்
சோம்பன் துனையான மூத்தோரை தந்தைதாயை
ஆனான சங்மில்லாதேதான்
வைவோனதிகமாம் வீணார்ப்பரானதூரன்
வேயூன வெறுங்கைவெகுதுஷ்டன்
மூர்க்கன் வெகுபுல்லன் குருதோகிக்கும் பொய்யாமே
விளக்கவுரை :
[ads-post]
123. ஆமேயா காமியத்தா
னடங்காக்காமன் அளம்பனான் எரிமுகத்தான் அதியபாண்டி
தூமைதுடைக்கின்ற
சுகியில்லாச் சண்டாலன் சிவவேடந்தரிசிக்கில் தூஷிப்போன்தான்
வாமேவு கோன்பொய்யன்
கோவியீனன் மகத்தானயீனாக்கன் வாதிதர்க்கன்
மாமேவு மாமிசத்தை
வருந்தித்தின்போன் மதுவாகியிவர்களுக்கு யோகம்பொய்யோ
விளக்கவுரை :
124. ரோகத்தால் யிவர்களுக்கு நீந்தால்பாவம் உடனேதான் நரகெய்தி உழுதுவான்பார்
யாகதூவிவர்களர்ச்சிக்கலாகா
அதிசயமாய் பிர்மத்தி யனுகும்பாரு
காகநூல்கர்ப்பத்தைச்
சூட்டலாகா கண்காணா தூரத்தே சயமாய்நில்லு
நாகநூல் ஞானத்தை விழித்தலாகா
நாட்டினால் நரகெய்து நலங்குவாரே
விளக்கவுரை :
125. நலங்கவே யாருக்குக்
கொடுப்பதென்றால் நாதாந்தவேதாந்த பிரமசாரி
மலங்கவே பலதூதிகர்மிகூர்மி
மகத்தான சிவயோகிபதி மார்க்கத்தார்
துலங்கவே
சுத்தசைதன்னியத்தோர் சொல்மொழிமதிவாத தூய்மையானார்
கலங்கவே தர்மமனுஷ்டித்தோர்
சார்ந்தோர் கர்ப்புடைய மங்கையரைக் கருதார்தானே
விளக்கவுரை :