போகர் சப்தகாண்டம் 116 - 120 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 116 - 120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
116. அழுந்துவார்தானென்ற ஆங்காரத்தி னல்லேவாப்பிடுங்காதார் அறியமாட்டார்
வருந்துவார் வாசியென்ற மவுனியோர்கள் மாசற்ற பிரமவிசாரத்தைக் காண்பார்கள்
மழுந்துவார் பிறப்பில்லை மரணமில்லை வாசியமே சித்தித்த மகத்தோர்க்குந்தான்
எழுந்துவார் காயசித்தி யோகசித்தி யெழிலானவாதசித்தி யேத்தந்தானே

விளக்கவுரை :


117. ஏத்தமாய் சித்தாவர் வாதிதன்னை இடும்பாகக்காணாமல் தூஷித்தாக்கால்
கூத்தமாம் ரவிகோடி சாவில்வீழ்வார் கொடும்பசியால் வறுமையால் திகைத்தேங்குவார்கள்
காத்தமாய் நரகமொடு சொர்க்கந்தானும் நரகமாயாயிது ரெண்டும் சொல்லக்கேளு
மாத்தமாம் மலத்திலே கிருமிச்சகிருமி மகத்தாக செனித்ததுபோல் நரகந்தானே

விளக்கவுரை :

[ads-post]

118. தானென்ற கோபத்தால் வந்தமுறையாலே தாக்கான ஜெனனமும் பலவுமாகும்
தேனென்ற ஜெனனமாய் ஜெனிப்பதெல்லாம் திகைப்பான கோபமது கொடும்பாவந்தான்
மானென்ற சொர்க்கத்தின் வழிதானேது மகத்தான மானிடனாக ஜெனித்து
பானென்ற முன்செய்த பலாபலத்தின் குறையால் பராபரத்தே தோன்றினால் மண்சொர்க்கந்தானே

விளக்கவுரை :


119. தானான பூரணமருத்துவம்நீபாரு தளிரானதீபம்போல் தான்முனைந்த தேகம்
கானான கண்டிப்பு தண்டிக்கப்படாது சத்தியதூடுவோடு வகைதட்டாது  
கோனான மனந்தானும் வாசியோடொன்றில் கூறாதபூரணமும் குறிப்பாய்தோன்றும்
கானான மாய்கையையுங் கண்டங்கழுந்திப்போகும் நலமான நிர்மலங்கா பூரத்தியே

விளக்கவுரை :


120. கற்பூரத் தீபம்போல்தீபமாகும் கடிதான பூரணம் வாவென்றேகூவும்
பர்ப்பூரம் போலொத்த வாசிதான்போகும்  பலபலவாந்துன்பமொடு பாவமற்றுப்போகும்
அர்ப்பூரக் காயமது அழியாதாகும் அதிமாயையில்லை யந்த கண்டத்தில்தான்
உர்ப்பூரத் தோயவே சித்தருக்கு உறவாடல் மெத்தவுண்டு உண்மையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar