போகர் சப்தகாண்டம் 111 - 115 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 111 - 115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
111. வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய் ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே

விளக்கவுரை :


112. மர்க்கடக ஐம்புலந்தான் மாண்டுபோகில் மாசற்றசிற்பனர்தான் சடர்கோடிபானு
கர்க்கடங் கண்டிதிரி கடந்தவெளிபாரு கடுவெளிக்கு மருவில்லை முடிவுமில்லை
கர்க்கடந்த ஒளிக்கு முடிவில்லைகாணும் காணவே அடியில்லை யுன்மனந்தானுண்ணு
புர்க்கடக மனந்தானே மகத்துவமித்தனையும் பெரிதானவழிதாண்டி கூடிற்றுதானே

விளக்கவுரை :

[ads-post]

நரகசொர்க்காதி

113. கூடிற்று மனந்தானே மாயத்தில்மருவி குழாம்பிப்போ யலைந்துகொண்டு குறிகூடாது
வாடித்து மனந்தானே போதத்தில்சொக்கி மாறாதகருணைக்குள் வாழ்ந்தோர்சித்தர்
காடிற்று மனமாளுங்கருணையாலே கண்டிக்கவாய்க்கும் எளிதாமோசொல்லு
மாடிற்று மாறாதகருணையாலும் வாச்சதே மெய்ஞான சித்திதானே

விளக்கவுரை :


114. சித்தியா மாறாதகருணைக்குள்நின்று ஜெகஜால வித்தையென்று தெள்ந்திட்டார்கள்
சித்தியா மவுனயோகத்தில்நின்று தெளிந்திட்டார் வெளிந்திட்டார் வாதன்பத்தில்
சித்தியாம் பெரியோர்க்கு மற்றொன்றுமில்லை சிகாரவாசியது சொன்னபடிகேட்கும்
சித்தியாமனவாக்கும்  பெரியோர்களுக்கு சொல்லரிதாம் பிர்மநிஷ்டை விசாரமாமே

விளக்கவுரை :


115. பிரமவிசாரத்தைதான் பேசிடும் வேதாந்தம் பேசமறைநூலதுதான் பிரமவிசாரத்தை
பிரமவிசாரத்தையே பேசும்பதினெட்டு பேரான அறுபத்துநாலு கலைதானும்
பிரமவிசாரத்தைப் பேசதொண்ணூற்றாறும் பிரமவிசாரத்தையே பேணுமற்றஞானம்
பரமவிசாரதினுடப் பேரறியாமாண்பர் பேயானமாய்கைதனி லழுந்துவாரே

விளக்கவுரை :

போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar